Maavadu – வடு மாங்காய் – மாவடு
மாவடு என்பது பிஞ்சு மாங்காய் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு வகையான ஊறுகாய், இது தமிழ்நாட்டில் மிகவும் பிரபலம். மாவடுவில் உள்ள தண்ணீர் உப்பு, விளக்கெண்ணெய், மசால் மற்றும் மாங்காவில் இருந்து வெளியேறும் நீர் கலந்த கலவை, மிக அருமையான ருசியில் மணமாக இருக்கும். வடு மாங்காய் ஒரு பருவகால உணவு, பிஞ்சு மாங்காய் கோடைகால தொடக்கத்தில் மட்டுமே கிடைக்கும். வடு மாங்காய் தயிர் சாதம் மற்றம் பருப்பு சோறுடன் உண்ண பொருத்தமாக இருக்கும்.
Find recipe in English here.
தேவையான பொருட்கள்
சிறிய வடு மாங்காய் – 1/2 கிலோ
மிளகாய் பொடி – 1/4 கப்
கடுகு பொடி – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டேபிள் ஸ்பூன்
நல்லெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
கல் உப்பு – 1/4 கப்
மாவடு செய்முறை
முன் தயாரிப்பு
அனைத்து மாங்காயையும் தண்ணிரில் நன்றாக கழுவிக்கொள்ளவும்.
ஒரு காய்ந்த துணி கொண்டு, மாங்காயில் ஒட்டியிருக்கும் தண்ணீரை துடைத்துக்கொள்ளவும்.
கடுகை எண்ணெய் ஊற்றாமல் சிறிது வறுத்து, மிக்சியில் அரைத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.
ஊறவைத்தல்
கழுவிய மாங்காய் அனைத்தையும் ஒரு கண்ணாடி / பீங்கான் / பிளாஸ்டிக் பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அதில் கல் உப்பு, எண்ணெய் சேர்த்து நன்றாக குலுக்கவும்.
இதே பாத்திரத்தில் மாங்காயை 5 நாட்கள் ஊறவிட வேண்டும்.
ஒவ்வொரு நாளும் இரண்டு முறை நன்றாக குலுக்கி விடவும்.
மாங்காயில் இருந்து தண்ணீர் நன்றாக வெளியேறும்.
மாங்காய் நன்றாக சுருங்கி விடும்.
ஊறுகாய் தயாரித்தல்
மாங்காய் ஊறிய உப்பு தண்ணீர் கலவையை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் அரைத்து வைத்திருக்கும் கடுகு பொடி சேர்க்கவும்.
மசாலாவை நன்றாக கலந்து, மாங்காயுடன் சேர்க்கவும்.
மாங்காய் மற்றும் மசாலா நன்றாக கலக்கும்படி கலக்கவும்.
மறுபடி 5 நாட்கள் இதை வைத்திருக்க வேண்டும்.
மாங்காய் நன்றாக சுருங்கி விடும்.
வடு மாங்காய் ஊறுகாய் தயார்.
இந்த ஊறுகாயை தயிர் சாதம் அல்லது பருப்பு சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.
கூடுதல் குறிப்புகள்
கல் உப்பை பொடித்து போட்டால் எளிதாக கரையும்.
மாங்காய் உடம்பிற்கு உஷ்ணம் அதனால் மாவடு தயாரிக்க விளக்கெண்ணெய் பயன்படுத்தினால் சூட்டைத் தணிக்கலாம்.
பாரம்பரிய சமையலில் விளக்கெண்ணெய் தான் பயன்படுத்துவர்.
கடுகு சுவை பிடித்தால் இன்னும் அதிகம் கூட சேர்க்கலாம்.
ஊறுகாயை கண்ணாடி/ பீங்கான்/ பிளாஸ்டிக் ஜாடியில் சேமித்து வைக்கலாம்.
ஊறுகாய் எடுக்க பயன்படுத்திய கரண்டியை அதிலே வைத்தால், ஊறுகாய் கெட்டுவிடும்.
பட விளக்கம்
கண்ணாடி மாங்காயை தண்ணிரில் கழுவிக்கொள்ளவும் கல் உப்பு சேர்க்கவும் நன்றாக குலுக்கவும் எண்ணெய் சேர்க்கவும் நன்றாக குலுக்கவும் மாங்காயை 5 நாட்கள் ஊறவிட வேண்டும் ஒவ்வொரு நாளும் இரண்டு முறை நன்றாக குலுக்கி விடவும் மாங்காய் சுருங்க ஆரம்பிக்கும் நன்றாக சுருங்கிய மாங்காய் மாங்காய் ஊறிய உப்பு தண்ணீர் கலவையை தனியாக ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும் அடுப்பில் பாத்திரத்தை வைத்து மிதமாக சூடு படுத்தவும். கடுகை எண்ணெய் ஊற்றாமல் சிறிது வறுத்துக்கொள்ளவும் மிக்சியில் அரைத்து பொடி பண்ணிக்கொள்ளவும் கடுகு பொடி மஞ்சள் தூள் சேர்க்கவும் அரைத்து வைத்திருக்கும் கடுகு பொடி சேர்க்கவும் மிளகாய் தூள் சேர்க்கவும் மசாலாவை நன்றாக கலக்கவும் மசாலா மசாலாவை மாங்காயுடன் சேர்க்கவும் மாங்காய் மற்றும் மசாலா நன்றாக கலக்கும்படி கலக்கவும் 5 நாட்கள் இதை வைத்திருக்க வேண்டும் வடு மாங்காய் ஊறுகாய் தயார் மாங்காய் நன்றாக சுருங்கி விடும் Maavadu – Mango pickle ready