கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல்

Kalyana Veettu Valakkai Varuval – கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல்

கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல் ஒரு காரமான மற்றும் மொறுகலான கூட்டு. இது பெரும்பாலும் திருமணம் போன்ற விருந்துகளில் பரிமாறப்படும். மேலும் இந்த வறுவல், மசாலா பொருட்களை அரைத்து செய்யப்படும். மிக எளிதாக, வேகமாக சமைக்கக்கூடிய பொரியல். என் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு இது.

Find detailed recipe in English here.

தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 1
மிளகு – 1/2 டீ ஸ்பூன்
சீரகம் – 1/2 டீ ஸ்பூன்
பெருஞ்சீரகம் – 1/4 டீ ஸ்பூன்
பூண்டு – 4 – 5 பல்
கருவேப்பிலை – 2 இணுக்கு
குழம்பு மசால் – 1/4 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல் செய்முறை

முன் தயாரிப்பு

வாழைக்காயின் தோலை சீவிக்கொள்ளவும்.
பின்னர் நீளவாக்கில் படத்தில் காட்டியபடி வெட்டிக்கொள்ளவும்.
வெட்டிய வாழைக்காய் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து தண்ணீர் ஊற்றி வைக்கவும். இது நிறம் மாறுவதை தடுக்கும்.
மிளகு, சீரகம் மற்றும் பெருஞ்சீரகத்தை மிக்சி ஜாரில் எடுத்து அரைத்துக்கொள்ளவும்.
இதனுடன் பூண்டு, ஒரு இணுக்கு கருவேப்பிலை மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

வாழைக்காய் பொரித்தல்

தண்ணீரை வடிகட்டி வாழைக்காயில், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும்.
வாழைக்காயை பொரித்துக்கொள்ளவும்.

வறுவல் தயாரித்தல்

இப்போது ஒரு பாத்திரத்தில் 2-3 டீ ஸ்பூன் எண்ணெய் எடுத்து, சிறு தீயில் சூடு பண்ணவும்.
அதில் அரைத்த மசாலா, குழம்பு மசாலா, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
ஒரு நிமிடத்திற்கு பின், பொரித்த வாழைக்காய் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
இப்போது தீயை மிதமாக வைத்து 3-5 நிமிடம் நன்றாக வதக்கவும்.
மசாலா நன்றாக வாழைக்காயில் படுமாறு கிளறவும்.
அடுப்பை அணைத்து விடவும்.
கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல் தயார்

கூடுதல் குறிப்புகள்

வாழைக்காயை மொறுகலாக வறுக்க வேண்டாம். வதக்கும்போது அது மேலும் கடினமாகி விடும்.

பட விளக்கம்


Discover more from Nish's Recipes

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “கல்யாண வீட்டு வாழைக்காய் வறுவல்”

Let me know the outcome of the recipe!