Coconut Chutney – தேங்காய் சட்னி
தேங்காய் சட்னி தென்னிந்தியாவில் மிகவும் பிரபலம். இது பொங்கல், இட்லி, தோசையுடன் சேர்த்து பரிமாறப்படும். நிறைய வீடுகளில் தினமும் தேங்காய் சட்னி அரைப்பார்கள். மிக எளிதாக தயாரிக்கக்கூடிய சட்னி வகைகளில் இதுவும் ஒன்று. சின்ன சின்ன விஷயங்களை சரியாக செய்தால் ஹோட்டல் ஸ்டைலில் சுவையான, தரமான சட்னி வீட்டிலேயே தயார்.
Find recipe in English here.
தேவையான பொருட்கள்
தேங்காய் – 3/4 கப் நறுக்கியது
பொரிகடலை – 1/3 கப்
பச்சை மிளகாய் – 3 – 5
இஞ்சி – சிறிய துண்டு
பூண்டு – 1 பல்
கருவேப்பிலை – 1 + 1 இணுக்கு
கடுகு உளுந்து – 1/2 டீ ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிது
உப்பு – தேவையான அளவு
தேங்காய் சட்னி செய்முறை
தேங்காய் அரைத்தல்
பச்சை மிளகாய், தேங்காய், இஞ்சி, பூண்டு மற்றும் 1 இணுக்கு கருவேப்பிலையை மிக்சி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்.
இதை நன்றாக அரைத்து கொள்ளவும்.
தேங்காய் இப்போது நன்றாக பூ போல் அரைபட்டு விடும்.
இதனுடன் பொரிகடலை சேர்த்து மறுபடி அரைத்து கொள்ளவும்.
இப்போது சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
உப்பு மற்றும் காரம் சரிபார்த்து தேவைக்கேற்ப சேர்த்துக்கொள்ளவும்.
அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் மாற்றவும்.
தாளித்தல்
ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடு படுத்தவும்.
எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு உளுந்தை சேர்க்கவும்.
கடுகு வெடித்தவுடன், கருவேப்பிலை சேர்க்கவும்.
கருவேப்பிலை வெடிக்கும்போது, அடுப்பை அணைத்து விடவும்.
இப்போது பெருங்காயத்தூளை சேர்த்து கலக்கவும்.
இந்த கலவையை சட்னியில் ஊற்றி, கலந்து விடவும்.
கூடுதல் குறிப்புகள்
உங்களுக்கு அதிக காரம் தேவையானால், பச்சை மிளகாய் அளவை கூட்டிக்கொள்ளவும்.
சட்னி அரைத்த பிறகு காரம் இன்னும் தேவைப்பட்டால், தளிக்கும் போது வரமிளகாய் சேர்த்து கொள்ளவும்.
பட விளக்கம்
Grind in Mixie Grind until it is coarse Add mustard in oil Add Asafoetida Chutney is ready
One Reply to “தேங்காய் சட்னி”