சிக்கன் சாய்லா

Chicken Choila – சிக்கன் சாய்லா

சிக்கன் சாய்லா என்பது நேபாளில் செய்யக்கூடிய மிக பிரபலமான உணவு. இது எனக்கு மிகவும் பிடித்த உணவு. கலிபோர்னியாவில் இருந்த போது ஒரு நேபாளி உணவகத்தில் இதை ருசித்திருக்கிறேன். நான் இந்த வகை சிக்கனுக்கு விசிறியாகிவிட்டேன், இதை விருந்து பரிமாறும் போது ஆரம்பத்தில் பரிமாற சிறந்தது. நான் எப்போதும் இதை காரமாக சாப்பிடத்தான் விரும்புவேன். இதை மட்டும் சாப்பிட்டாலே வயிறு நிறைந்துவிடும்.

Find recipe in English here.

தேவையான பொருட்கள்

சிக்கன் வேகவைக்க

சிக்கன் – 400 கிராம் (எலும்பில்லாமல்)
தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் – 1 டீ ஸ்பூன்
சீரகத்தூள் – 1 டீ ஸ்பூன்
வெண்ணெய் – சிறிது

சாய்லா செய்ய

பூண்டு – 2 பல் (நறுக்கியது)
இஞ்சி – 1 டீ ஸ்பூன் (நறுக்கியது)
தக்காளி – 1 (தண்ணீரில் வேகவைத்து கூழாக்கி கொள்ளவும்)
வரமிளகாய் – 5 (தண்ணீரில் ஊறவைத்து இடித்து கொள்ளவும்)
சீரகம் – 1/2 டீ ஸ்பூன் (பொடி செய்து கொள்ளவும்)
வெந்தயம் – 1/2 டீ ஸ்பூன் (பொடி செய்து கொள்ளவும்)
மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்
நல்லெண்ணெய் – 1.5 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1/2 டீ ஸ்பூன்
கொத்தமல்லி இலை – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
எலுமிச்சை – 1/2 (சாறு எடுத்து கொள்ளவும்)
குடை மிளகாய் – 1/2 (நீளவாக்கில் வெட்டி வதக்கியது)
வெங்காயம் – 1/2 (நீளவாக்கில் வெட்டி வதக்கியது)
உப்பு – தேவையான அளவு

சிக்கன் சாய்லா செய்முறை

சிக்கன் ஊறவைத்தல்

தண்ணீரில் சிக்கனை கழுவி, பெரிய துண்டுகளாக நீளவாக்கில் வெட்டி கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் தயிர், கரம் மசாலா, மிளகாய் தூள், மிளகுத்தூள் மற்றும் சீரகத்தூள் எடுத்து கொள்ளவும்.
அனைத்தையும் நன்றாக கலக்கி கொள்ளவும்.
இந்த கலவையை, சிக்கனில் சேர்த்து கலந்து கொள்ளவும்.
இந்த கலவை குறைந்த பட்சம் 6 மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.

சிக்கன் வேகவைத்தல்

முன்கூட்டியே ஓவனை 350 டிகிரியில் சூடுபடுத்தி வைக்கவும்.
ஒரு கிரில் கடாய் எடுத்து வெண்ணெய் தடவிக்கொள்ளவும்.
அதில் ஊறவைத்த சிக்கனை அடுக்கி கொள்ளவும்.
கிரில் கடாயை ஓவன் உள்ளே வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும்.
சிக்கனை திருப்பி போட்டு மறுபடி 5 நிமிடம் வேக வைக்கவும்.
இப்போது ஓவனில் உள்ள கிரில் செட்டிங்கை ஆன் செய்து கொள்ளவும்.
இந்த செட்டிங்கில் வைத்து 3 நிமிடம் வேகவைக்கவும்.
கிரில் செட்டிங் இல்லையென்றால், சிக்கன் மேலுள்ள மசாலா பச்சை வாசனை போகும் வரை ஓவனில் வேகவைக்கவும்.

சாய்லா தயாரித்தல்

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடு படுத்தவும்.
அதனுடன் நறுக்கி வைத்த இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும்.
மேலும் தக்காளி கூழ், இடித்த வரமிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
இதனுடன் வேகவைத்த சிக்கன் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
இப்போது பொடித்து வைத்துள்ள மிளகு, சீரகம் மற்றும் வெந்தய தூளை சேர்த்து கிளறவும்.
எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.
வேறு ஒரு கடாயில், சிறிது எண்ணெய் சேர்த்து குடை மிளகாயை லேசாக வதக்கி, சிக்கனுடன் சேர்க்கவும்.
பின்னர் வெங்காயத்தையும் லேசாக வதக்கி, சிக்கனுடன் சேர்க்கவும்.
அனைத்தும் நன்றாக கலக்கும்படி கிளறவும்.
அடுப்பை அணைத்து, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
சிக்கன் சாய்லாவை பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்

காரத்தை விரும்புபவர்கள், மிளகை அதிகரிக்கவும்.
பாரம்பரியமான தயாரிப்பில் மிளகு, சீரகம் மற்றும் வெந்தயத்தை முழுதாக தட்டாமல் ஒன்றுக்கு பாதியாக தட்டவும்.
வெந்தயம் தான் இந்த உணவிற்கு சுவையைக் கூட்டும் அதனால் அதை தவிர்க்காதீர்கள்.

பட விளக்கம்

சிக்கன் ஊறவைத்தல்

சிக்கன் சாய்லா வழிமுறை 1

சிக்கன் வேக வைத்தல்

சாய்லா செய்தல்

வழிமுறை 2

சிக்கன் வேக வைத்தல்

சாய்லா செய்தல்

One Reply to “சிக்கன் சாய்லா”

Let me know the outcome of the recipe!