Kaara Chutney – காரச் சட்னி
காரச் சட்னி என்பது செட்டிநாடு முறையில் காரமாக தயாரிக்கப்படும் ஒரு வகையான சட்னி. இது சின்ன வெங்காயம், தக்காளி, வர மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து செய்யப்படும். காரசட்னி பனியாரம், இட்லி மற்றும் கல் தோசையுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமாக இருக்கும். காரச்சட்னி மிக குறைந்த நேரத்தில் எளிமையாக தயார் செய்யக்கூடியது.
Find Recipe in English here.
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் – 1/2 கப் நறுக்கியது
தக்காளி – 2 பெரியது
நல்லெண்ணெய் – 1 + 2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 12 + 3
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 7 – 8 பல்
கருவேப்பிலை – 1 + 1 இணுக்கு
கொத்தமல்லி இலை – 1/4 கப்
புதினா – 1/4 கப்
மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீ ஸ்பூன்
கடுகு – 1/4 டீ ஸ்பூன்
உளுந்து – 1/2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
காரச் சட்னி செய்முறை
ஒரு பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடு படுத்தவும்.
அதில் இஞ்சி, பூண்டை சேர்த்து வதக்கவும்.
அதனுடன் கருவேப்பிலை, 12 வரமிளகாய் மற்றும் வெட்டி வைத்திருக்கும் வெங்காயம் சேர்க்கவும்.
சிறிது நேரம் வதக்கிய பின், நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்க்கவும்.
தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கவும்.
இப்போது மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவும்.
இதனுடன் கொத்தமல்லி இலை மற்றும் புதினா சேர்த்து சுருங்கும் வரை வதக்கவும்.
அடுப்பை அணைத்து நன்றாக ஆறவிடவும்.
நன்கு ஆறிய கலவையை ஒரு மிக்சி ஜாரில் எடுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
மறுபடி அதே பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடு படுத்தவும்.
எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்து சேர்க்கவும்.
கடுகு வெடித்தவுடன், கருவேப்பிலை மற்றும் 3 வர மிளகாய் சேர்க்கவும்.
சிறிது வதக்கியபின், மிக்சி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் சட்னியை சேர்க்கவும்.
நன்றாக கிளறி, அடுப்பை அணைக்கவும்.
கார சட்னி தயார்.
பணியாரம், இட்லி அல்லது தோசையுடன் சேர்த்து பரிமாறவும்.
கூடுதல் குறிப்புகள்
சின்ன வெங்காயத்திற்கு பதில் பெரிய வெங்காயம் உபயோகிக்கலாம்.
உங்கள் கார தேவைக்கேற்ப வரமிளகாய் அளவை மாற்றிக்கொள்ளவும்.
பட விளக்கம்

தேவையான பொருட்கள்

ஒரு பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும் 
மிதமான தீயில் சூடு படுத்தவும் 
இஞ்சி சேர்க்கவும் 
பூண்டு சேர்க்கவும் 
சிறிது நேரம் வதக்கவும் 
12 வரமிளகாய் சேர்க்கவும் 
கருவேப்பிலை சேர்க்கவும் 
சிறிது நேரம் வதக்கவும் 
வெங்காயம் சேர்த்து வதக்கவும் 
தக்காளியை சேர்த்து வதக்கவும் 
தக்காளி மசியும் வரை வதக்கவும் 
மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும் 
நன்றாக கிளறவும் 
கொத்தமல்லி இலை மற்றும் புதினா சேர்த்து நன்றாக கிளறவும் 
அடுப்பை அணைத்து நன்றாக ஆறவிடவும் 
கலவையை மிக்சி ஜாரில் எடுத்து கொள்ளவும் 
சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும் 

அதே பாத்திரத்தில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடு படுத்தவும் 
எண்ணெய் சூடானதும் கடுகு, உளுந்து சேர்க்கவும் 
கடுகு வெடித்தவுடன், கருவேப்பிலை சேர்க்கவும் 
3 வர மிளகாய் சேர்க்கவும் 
அரைத்து வைத்திருக்கும் சட்னியை சேர்க்கவும் 
நன்றாக கிளறி, அடுப்பை அணைக்கவும் 
கார சட்னி தயார் 
Kaara Chutney 
காரச் சட்னி
Discover more from Nish's Recipes
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “காரச் சட்னி”