டபுள் கா மீத்தா

Double Ka Meetha – டபுள் கா மீத்தா

டபுள் கா மீத்தா என்பது பிரட்டினால் செய்யப்படும் ஒரு வகையான இனிப்பு. பொரிக்கப்பட்ட பிரட்டை எலக்காய் மற்றும் குங்கும பூ சேர்த்து கெட்டியாக காய்ச்சிய பாலில் ஊறவைத்து செய்யப்படும் உணவு. டபுள் கா மிட்டாய் ஆந்திர மாநிலத்தின் சிறந்த இனிப்பு. ஆந்திராவில் இது கல்யாணம் மற்றும் விஷேச வீடுகளில் பிரபலமாக பரிமாறப்படும். பொரித்த பிரட்டை கெட்டியான பாலுடன் சமைக்கும் போது அது உப்பி இரண்டு மடங்காக ஆகும், அதனால் அதன் பெயர் டபுள் கா மிட்டாய். 

Find recipe in English here.

தேவையான பொருட்கள்

பிரட் – 12 துண்டுகள்
பால் – 500 மி.லி (2.5 கப்)
சர்க்கரை – 200 கிராம் (1 கப்)
கண்டென்ஸ் பால் – 1 டின் (14oz)
குங்குமப்பூ – 20 இழைகள்
பாதாம், பிஸ்தா பருப்பு – 1.5 டேபிள் ஸ்பூன்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
ஆரஞ்சு கலர் (விரும்பினால்)
எண்ணெய் – பொறிக்க தேவையான அளவு

அலங்கரிக்க (விருப்பமிருந்தால்)

பால்கோவா – 50 கிராம்
பாதாம், பிஸ்தா பருப்பு – தேவையான அளவு

டபுள் கா மீத்தா செய்முறை

பிரட் வறுத்தல்

பிரட் துண்டுகளை ஒரு தட்டில் பரத்தி உலர வைக்கவும்.
ஒரு 30 நிமிடம் வரை சூரிய ஒளி அல்லது மின்விசிறி கீழே வைத்து உலர்த்தவும்.
ஒவ்வொரு பிரட் துண்டையும் 4 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, நெய்யும் சேர்த்து மிதமான தீயில் சூடு படுத்தவும்.
எல்லா பிரட் துண்டுகளையும் நிறம் மாறும் வரை பொரிக்கவும்.

ரப்டி – பால் திரட்டு செய்முறை

ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி முழு தீயில் வைத்து சூடு படுத்தவும்.
பால் பொங்கி வரும்போது தீயை குறைத்து, குங்குமப்பூ சேர்க்கவும்.
இப்போது கண்டென்ஸ் பால் சேர்த்து கிளறவும்.
இதனுடன் பாதாம், பிஸ்தா பருப்பை சேர்க்கவும்.
பால் கெட்டியாகும் வரை நன்றாக கிளறவும்.
ரப்டி தயார்.

சர்க்கரை பாகு செய்முறை

ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை எடுத்து, 1/2 கப் தண்ணீர் சேர்த்து சூடு பண்ணவும்.
இதனுடன் சிறிது குங்குமப்பூ சேர்க்கவும்.
ஒரு கம்பி பதம் வரும் வரை காய்ச்சவும்.

மீட்டா செய்முறை

வறுத்த பிரட் துண்டுகளை ஒரு பெரிய பாத்திரத்தில் படத்தில் காட்டியபடி அடுக்கவும்.
காய்ச்சி வைத்திருக்கும் ரப்டியில் பாதியை பிரட் துண்டுகள் மேல் ஊற்றவும்.
அதனுடன் சர்க்கரை பாகுவையும் ஊற்றி, முழு தீயில் வைத்து 8-10 நிமிடம் கொதிக்க விடவும்.
இப்போது மீதமிருக்கும் ரப்டியையும் ஊற்றி 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விடவும்.
அடுப்பை அணைத்து, பால்கோவா மற்றும் பாதாம், பிஸ்தா பருப்பை தூவி இறக்கவும்.
டபுள் கா மிட்டா தயார்.
மிட்டாவை விருந்துக்கு அடுத்து பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்

பிரட்டை உலர்த்தாமல் பொரித்தால், அதில் உள்ள ஈரப்பதம் பொரிக்கும் எண்ணெயை அதிக அளவு உறிஞ்சும்.
இரண்டு பக்கமும் பிரட்டை திருப்பி உலர்த்தினால் முழுமையாக உலரும்.
ரப்டி தயாரிப்பில் கன்டன்ஸ்டு மில்க்குக் பதில் பால்கோவா (200கி) பயன்படுத்தலாம்.
ரப்டி தயாரிக்கும் போது எலக்காய் தூவலாம்.
பல தானியங்கள் கலந்த பிரட் இதில் பயன்படுத்தி உள்ளேன். மைதா, கோதுமை பிரட் கூட இதற்கு பயனபடுத்தலாம்.
எண்ணெய் மற்றும் நெய் கலந்து பொரிக்கும் போது ருசியும் மணமும் கூடும்.

பட விளக்கம்

பிரட் வறுத்தல்

பால் காய்ச்சுதல்

சர்க்கரை பாகு தயாரித்தல்

மீட்டா தயாரித்தல்

Let me know the outcome of the recipe!