Valaithandu Soup – வாழைத்தண்டு சூப்
வாழைத்தண்டு சூப் ஒரு ஆரோக்கிய பானம். உடலிலிருந்து கெட்ட கழிவுகள் வெளியேறவும், கொழுப்பு, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. இது உடல் எடையை குறைக்கவும், வாயு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரி செய்யவும் உதவுகின்றது. நான் தயாரிக்கும் இந்த முறை, மிக எளிதானது மற்றும் ருசியானது. வாழைத்தண்டு சுத்தம் செய்யும் முறையை இங்கே பார்த்துக்கொள்ளவும்.
Find recipe in English here.
தேவையான பொருட்கள்
வாழைத்தண்டு – 1/4 கிலோ
நீர் மோர் / 2 டேபிள் ஸ்பூன் தயிர் + தண்ணீர்
துவரம் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1/4 டீ ஸ்பூன் + 1/2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை – 1 இணுக்கு
சின்ன வெங்காயம் – 5 நறுக்கியது
பூண்டு – 2 பல்
இஞ்சி – சிறு துண்டு
கொத்தமல்லி இலை – மேலே தூவ
உப்பு – தேவையான அளவு
வாழைத்தண்டு சூப் செய்முறை
முன் தயாரிப்பு
வாழைத்தண்டிலிருந்து வரும் நாரை எடுத்து சுத்தம் செய்து கொள்ளவும்.
சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, நீர் மோர் கலவையில் போட்டுக்கொள்ளவும்.
இஞ்சி, பூண்டை விழுது போல் மையாக தட்டிக்கொள்ளவும்.
மிளகு மற்றும் சீரகத்தை இடித்து பொடி பண்ணிக்கொள்ளவும்.
வாழைத்தண்டு வேகவைத்தல்
துவரம் பருப்பை ஒரு குக்கரில் எடுத்து, தண்ணிரில் அலசிக்கொள்ளவும்.
இதனுடன், நீர் மோரில் ஊறிக்கொண்டிருக்கும் வாழைத்தண்டை சேர்த்துக்கொள்ளவும்.
மேலும் மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக்கொள்ளவும்.
வாழைத்தண்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றவும்.
5 முதல் 7 விசில் வரை மிதமான தீயில் வைத்து வேகவைக்கவும்.
சாறு பிழிதல்
குக்கரில் உள்ள தண்ணீரை ஒரு சல்லடை கொண்டு வடிகட்டிக் கொள்ளவும்.
இப்போது வாழைத் தண்டை, மிக்சி ஜார் அல்லது கை கலக்கி கொண்டு அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த வாழைத்தண்டிலிருந்து சாறு பிழிந்து கொள்ளவும்.
சூப் தயாரித்தல்
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும்.
எண்ணெய் சூடானதும், 1/4 டீ ஸ்பூன் சீரகம் சேர்க்கவும்.
சீரகம் வெடிக்கும் போது கருவேப்பிலை சேர்க்கவும்.
நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்க்கவும்.
பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
இதனுடன் வாழைத்தண்டு சாறு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
பொடி செய்து வைத்திருக்கும் மிளகு, சீரகத்தை சேர்க்கவும்.
இந்த கலவையை 5 நிமிடம் கொதிக்க விடவும்.
அடுப்பை அணைத்து விட்டு, கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
வாழைத்தண்டு சூப் தயார்.
ஒரு கிண்ணத்தில் ஊற்றி பரிமாறவும்.
கூடுதல் குறிப்புகள்
இளம் வாழைத்தண்டில் நார் அதிகம் இருக்காது. அதனால் வடிகட்ட அவசியம் இருக்காது,
உங்கள் காரத்தேவைக்கேற்ப மிளகு அளவை மாற்றிக்கொள்ளவும்.
கை கலக்கி இல்லையென்றால், மிக்சி ஜாரில் அரைக்கவும்.
உங்களுக்கு வெங்காயம் பிடிக்காதென்றால், தவிர்த்து விடலாம்.
சின்ன வெங்காயத்திற்குப் பதில் பெரிய வெங்காயம் உபயோகிக்கலாம்.
பட விளக்கம்

வேக வைத்தல்









சாறு பிழிதல்









சூப் தயாரித்தல்



















One Reply to “வாழைத்தண்டு சூப்”