Spicy Cheese Sandwich – காரமான சீஸ் சாண்ட்விச்
காரமான சீஸ் சாண்ட்விச் என்பது காரசாரமாக சீஸினை பிரெட்டிற்குள் பொதிந்து செய்யப்படும் ஒரு வகையான உணவு. பொதுவாக சாண்ட்விச் என்பது காய்கறிகள், துருவிய சீஸ் அல்லது மாமிசத்தை பிரெட் துண்டுகளுக்கு நடுவில் வைத்து சமைக்கப்படும். இது குழந்தைகளுக்கு ஏற்ற உணவு.
Find recipe in English here.
தேவையான பொருட்கள்
பிரெட் – 4 துண்டுகள்
வெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
சீஸ் துருவியது – 1/2 கப்
பூண்டு – 5 பல்
வரமிளகாய் துருவல் – 1/2 டீ ஸ்பூன்
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
காரமான சீஸ் சாண்ட்விச் செய்முறை
முன் தயாரிப்பு
வெண்ணெயை குளிர்சாதன பெட்டியிலிருந்து வெளியே எடுத்து, அறை வெப்பநிலைக்கு வரும் வரை வைக்கவும்.
பூண்டை மிக சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
காரமான சீஸ் கலவை தயாரித்தல்
அறை வெப்பநிலையில் இருக்கும் வெண்ணெயை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் பூண்டு, வரமிளகாய் துருவல் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
இதனுடன் சீஸ் துருவலையும் சேர்த்து மறுபடி கலக்கவும்.
சீஸ் கலவை தயார்.
சாண்ட்விச் தயாரித்தல்
ஒரு பிரெட் துண்டை எடுத்து அதில் சிறிது சீஸ் கலவையை வைக்கவும்.
கத்தி அல்லது கரண்டி கொண்டு பிரெட் முழுவதும் சீஸை பரத்தி விடவும்.
இதன் மேல் ஒரு ப்ரெட் துண்டு வைத்து மூடவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து மிதமான தீயில் சூடு படுத்தவும்.
தோசைக்கல்லில் சிறிது வெண்ணெய் சேர்க்கவும்.
வெண்ணெய் உருகும் பொது, ப்ரெட்டை வைக்கவும்.
பிரெட்டின் மேலே சிறிது வெண்ணெய் வைத்து பரத்தி விடவும்.
இரண்டு பக்கத்திலும் வெண்ணெய் சேர்த்துள்ளோம்.
ஒருபக்கம் லேசாக சிவந்தவுடன், திருப்பி போடவும்.
மறுபக்கம் வெந்தவுடன், தோசைக்கரண்டி கொண்டு இரண்டாக வெட்டவும்.
சாண்ட்விச்சை எடுத்துவிடவும். இதேபோல் மீதமுள்ள ப்ரெட்டையும் சாண்ட்விச் செய்துகொள்ளவும்.
கெச்சப் அல்லது தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும்.
கூடுதல் குறிப்புகள்
இங்கு பல தானிய பிரெட் பயன்படுத்தியுள்ளேன், எந்த வகையான பிரெட்டையும் இந்த முறையில் சமைக்கலாம்.
நீங்கள் உபயோகிக்கும் சீஸ் துருவல் பெரியதாக இருந்தால், 30 வினாடி மைக்ரோவேவில் சூடுபடுத்திக்கொள்ளவும், இல்லை என்றால் சீஸ் மற்ற பொருட்களுடன் சரியாக கலக்காது.
சாண்விச்சை சாண்விச் மேக்கரிலும் சமைக்கலாம்.
பட விளக்கம்
காரமான சீஸ் கலவை தயாரித்தல்
வெண்ணெயை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும் பூண்டு, வரமிளகாய் துருவல் மற்றும் கொத்தமல்லி இலை சேர்க்கவும் நன்றாக கலக்கவும் சீஸ் துருவலையும் சேர்த்து மறுபடி கலக்கவும் சீஸ் கலவை தயார்
சாண்ட்விச் தயாரித்தல்
பிரெட் துண்டில் சீஸ் கலவையை வைக்கவும் கத்தி கொண்டு பிரெட் முழுவதும் சீஸை பரத்தி விடவும் இதன் மேல் ஒரு ப்ரெட் துண்டு வைத்து மூடவும் தோசைக்கல்லில் சிறிது வெண்ணெய் சேர்க்கவும் மிதமான தீயில் சூடு படுத்தவும் வெண்ணெய் உருகும் பொது, ப்ரெட்டை வைக்கவும் பிரெட்டின் மேலே சிறிது வெண்ணெய் வைக்கவும் பரத்தி விடவும் லேசாக சிவந்தவுடன், திருப்பி போடவும் மறுபக்கம் வெந்தவுடன் திருப்பி போடவும் தோசைக்கரண்டி கொண்டு இரண்டாக வெட்டவும் காரமான சீஸ் சாண்ட்விச் சாண்ட்விச்சை எடுத்துவிடவும் கெச்சப் அல்லது தக்காளி சாஸ் சேர்த்து பரிமாறவும் Spicy cheese Sandwich
One Reply to “காரமான சீஸ் சாண்ட்விச்”