வாழைக்காய் பஜ்ஜி

Plantain Bajji – வாழைக்காய் பஜ்ஜி

வாழைக்காய் பஜ்ஜி ஒரு பிரபலமான ரோட்டுக்கடை சிற்றுண்டி. எளிதாக மிக குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய மாலை நேர சிற்றுண்டி. பஜ்ஜி எல்லா வகையான காய்கறிகளாலும் செய்யலாம். மழை நாட்களில் காரமான பஜ்ஜி சாப்பிட மிக பொருத்தமாக இருக்கும்.

Find recipe in English here.

தேவையான பொருட்கள்

வாழைக்காய் – 2
கடலை மாவு – 2 கப்
மிளகு தூள் – 1 டீ ஸ்பூன்
சீரக தூள் – 1 டீ ஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
சோடா உப்பு – சிறிது
மிளகாய் தூள் – 3 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க

வாழைக்காய் பஜ்ஜி செய்முறை

வாழைக்காயின் இரண்டு பக்கத்திலும் வெட்டி விட்டு, தோலை சீவவும்.
சிறிய பஜ்ஜி வேண்டுமென்றால், வாழைக்காயை இரண்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கத்தி அல்லது இழைப்பான் கொண்டு வாழைக்காயை சீவிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவை எடுத்துக்கொள்ளவும்.
அதனுடன் மிளகாய் தூள், மிளகு, சீரக தூள், உப்பு, பெருங்காயம் மற்றும் சோடா உப்பை சேர்த்துக்கொள்ளவும்.
கட்டி சேராத அளவு நன்றாக கலக்கவும்.
பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
கெட்டியான தோசை மாவு பதம் வந்தவுடன், உப்பு, காரம் சரி பார்த்துக்கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் சூடு படுத்தவும்.
ஒரு வாழைக்காய் துண்டை எடுத்து மாவில் முக்கவும்.
இரண்டு பக்கமும் நன்றாக மாவு படுமாறு செய்யவும்.
அதிகமாக ஒட்டி இருக்கும் மாவை, வடித்துக்கொள்ளவும்.
மாவு இருக்கும் வாழைக்காய் துண்டை எண்ணெயில் போடவும்.
பஜ்ஜி நன்றாக உப்பி வரும்.
ஒரு பக்கம் வெந்ததும், திருப்பி போடவும்.
மறுபக்கம் வெந்ததும் எடுத்து விடவும்.
அனைத்து வாழைக்காய் துண்டுகளையும் பொரித்துக்கொள்ளவும்.
வாழைக்காய் பஜ்ஜி தயார்.
கெட்டி சட்னி வைத்து வாழக்காய் பஜ்ஜியை பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்

கடாயில் எண்ணெய் தேவையான அளவு சேர்த்துக்கொள்ளவும்.
எண்ணெய் நன்றாக சூடான பின்னர் பொரிக்கவும்.
பழுத்த வாழைக்காயை பஜ்ஜி செய்ய பயன்படுத்தாதீர்கள்.
பஜ்ஜி மாவை ரொம்ப நீர்க்க கரைக்காதீர்கள், பின் பஜ்ஜி எண்ணெயை நிறையக் குடிக்கும்.

பட விளக்கம்

One Reply to “வாழைக்காய் பஜ்ஜி”

Let me know the outcome of the recipe!