மாங்காய் சாதம்

மாங்காய் சாதம் – Raw Mango Rice

மாங்காய் சாதம் கோடைகாலத்தில் மாங்காய் கிடைக்கும்போது மட்டுமே செய்யக்கூடிய கலந்த சாதம். இது மாங்காய் துருவல் மற்றும் எளிதான தாளிக்கும் பொருட்களை மட்டுமே வைத்து தயாரிக்கப்படுகின்றது. இது மிக எளிதாக, விரைவாக செய்யக்கூடிய உணவு. கல்லூரி காலங்களில் என் தோழி இந்த சாதத்தை மதிய உணவிற்கு எடுத்து வருவாள். நான் அதை மிகவும் விரும்பி ருசிப்பேன். என் தோழியின் அம்மா செய்யும் சாதம் மிக அருமையாக இருக்கும்.

Find Recipe in English here.

தேவையான பொருட்கள்

வேகவைத்த சாதம் – 1.5 கப்
மாங்காய் – 1/2 கப் துருவியது,
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
கடுகு உளுந்து – 1/4 டீ ஸ்பூன்
குழம்பு கடலை பருப்பு – 1 டீ ஸ்பூன்
வேர்க்கடலை – 2 டேபிள் ஸ்பூன்
வத்தல் (காய்ந்த சிவப்பு மிளகாய்) – 2
பெருங்காயம் – 1/2 டீ ஸ்பூன்
கருவேப்பிலை – 1 இணுக்கு
கொத்தமல்லி இலை – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

மாங்காய் சாதம் செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்துக்கொள்ளவும்.
கடுகு உளுந்து, குழம்பு கடலை பருப்பு சேர்க்கவும்.
கடுகு வெடிக்கும்போது, கருவேப்பிலை சேர்க்கவும்.
கருவேப்பிலை வெடிக்கும்போது, பச்சை மிளகாய், வத்தல் சேர்க்கவும்.
சிறிது வதக்கியபின், வேர்க்கடலை, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்க்கவும்.
எல்லாம் ஒன்றுடன் ஒன்று சேரும்படி நன்கு கலக்கவும்.
இப்போது துருவிய மாங்காயை சேர்த்து, கரண்டியை வைத்து கலக்கியபடி ஒரு நிமிடம் வதக்கவும்.
பின் வேகவைத்த சாதத்தை சேர்க்கவும்.
வதக்கிய அனைத்து பொருட்களும் சாதத்துடன் நன்கு கலக்கும்படி கிளறவும்.
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி, அடுப்பை விட்டு இறக்கவும்.
Mangai சாதம் தயார்.
மதிய உணவிற்கு எடுத்து செல்ல உகந்தது.

கூடுதல் குறிப்புகள்

1.5 கப் சாதம் கிடைக்க, 1/2 கப் அரிசியை வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம்.
நான் மாங்காயை தோலுடன் சேர்த்து துருவியுள்ளேன். நீங்கள் தோலை நீக்கிவிட்டும் துருவலாம்
இந்த ரெசிபியில் தேவையான அளவு முந்திரிப்பருப்பையும் சேர்த்துக்கொள்ளலாம்.

படவிளக்கம்

Let me know the outcome of the recipe!