Chilli Parotta – சில்லி பரோட்டா
சில்லி பரோட்டா ஒரு பிரபலமான உணவு, தென்னிந்தியாவின் பெரும்பாலான உணவகங்களில் கிடைக்கும். சாதா பரோட்டாவை சிறிய துண்டுகளாக வெட்டி, வெங்காயம், தக்காளி மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து தயாரிக்கப் படுகின்றது. கடையில் இந்த புரோட்டாவுக்கு தயிர் பச்சடி அல்லது தக்காளி சாஸ் கொடுப்பார்கள். இது என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். என் குழந்தைகள் இதனை அடிக்கடி தயாரிக்க சொல்லுவார்கள்.
Find recipe in English here.
தேவையான பொருட்கள்
பரோட்டா பொறிக்க
பரோட்டா – 4
மைதா மாவு – 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
சாஸ் தயாரிக்க
வெங்காயம் – 1 (சிறியதாக நறுக்கியது)
தக்காளி – 1
இஞ்சி – 1 டீ ஸ்பூன் (சிறியதாக நறுக்கியது)
பூண்டு – 1 டீ ஸ்பூன் (சிறியதாக நறுக்கியது)
எண்ணெய் – பொரிக்க + 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
சிவப்பு வெங்காயம் – 1/2 (பெரிதாக நறுக்கியது)
பச்சை குடை மிளகாய் – 2 டேபிள் ஸ்பூன் (பெரிதாக நறுக்கியது)
கெச்சப் / தக்காளி சாஸ் – 1 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீ ஸ்பூன்
சில்லி சாஸ் – 1 டீ ஸ்பூன்
கொத்தமல்லி இலை – 1 டேபிள் ஸ்பூன் + மேலே தூவ
புதினா – மேலே தூவ
எலுமிச்சை துண்டு – பரிமாற (விரும்பினால்)
சிவப்பு நிற கலர் – சிறிதளவு (விரும்பினால்)
உப்பு – தேவையான அளவு
சில்லி பரோட்டா செய்முறை
பரோட்டாவை பொரித்தல்
பரோட்டாவை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில், மைதா மாவு, சோள மாவு, கரம் மசாலா மற்றும் மிளகாய் தூளை எடுத்துக்கொள்ளவும்.
கொஞ்சம் தண்ணிர் சேர்த்து தோசை பதத்திற்கு மாவை கரைத்துக்கொள்ளவும்.
இதில் வெட்டி வைத்திருக்கும் பரோட்டாவை சேர்த்து நன்றாக கலக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் சூடு படுத்தவும்.
மசால் கலந்த பரோட்டாவை எண்ணையில் பொரித்துக்கொள்ளவும்.
பொரித்த பரோட்டா தயார்.
சில்லி பரோட்டா தயாரித்தல்
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும்.
நறுக்கி வைத்திருக்கும் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும்.
சிறிது வதக்கிய பின், சிறிதாக நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்க்கவும்.
வெங்காயம் நிறம் மாறியவுடன், தக்காளி சேர்க்கவும்.
தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கவும்.
இப்போது மிளகாய் பொடி மற்றும் கரம் மசாலாவை சேர்க்கவும்.
நன்றாக கிளறியபின், கெச்சப் மற்றும் சில்லி சாஸ் சேர்க்கவும்.
இதனுடன் கொத்தமல்லி இலை, புதினா இலையை சேர்த்து நன்றாக கிளறவும்.
இப்போது பெரிதாக வெட்டி வைத்திருக்கும் சிவப்பு வெங்காயம் மற்றும் குடை மிளகாயை சேர்க்கவும்.
30 நொடி வதக்கி பின், 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
விரும்பினால் கலர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், பொரித்த பரோட்டாவை சேர்க்கவும்.
சாஸ் / மசாலா எல்லா பரோட்டாவிலும் கலக்கும் வரை கிளறவும்.
கிரேவி கெட்டியாக மாறும் போது, அடுப்பை அணைக்கவும்.
கொத்தமல்லி இலையை மேலே தூவி இறக்கவும்.
சில்லி புரோட்டா தயார்.
எலுமிச்சை துண்டு, தயிர் பச்சடி சேர்த்து பரிமாறவும்.
கூடுதல் குறிப்புகள்
சில்லி பரோட்டா கரமாக இருந்தால், கொஞ்சம் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்துக்கொள்ளவும்.
பரோட்டாவை எண்ணையில் பொரிக்க வேண்டாம் என்று நினைத்தால், ஒரு சட்டியில் எண்ணெய் தெளித்து வறுத்துக்கொள்ளவும்.
பரோட்டாவை பதமான பக்குவத்தில் பொரித்தால்/ வறுத்தால் தான் சுவை நன்றாக இருக்கும்.
பட விளக்கம்
பரோட்டாவை பொரித்தல்
பரோட்டாவை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும் மைதா மாவு, சோள மாவு, கரம் மசாலா மற்றும் மிளகாய் பொடியை எடுத்துக்கொள்ளவும் தண்ணிர் சேர்த்துக்கொள்ளவும் தோசை மாவு பதத்திற்கு மாவை கரைத்துக்கொள்ளவும் பரோட்டாவை சேர்த்து நன்றாக கலக்கவும் கடாயில் எண்ணெய் ஊற்றி, மிதமான தீயில் சூடு படுத்தவும் மசால் கலந்த பரோட்டாவை எண்ணையில் பொரித்துக்கொள்ளவும் பொரிந்தவுடன் வெளியே எடுக்கவும் பொரித்த பரோட்டா தயார்
சில்லி பரோட்டா தயாரித்தல்
எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து சூடுபடுத்தவும் இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயை சேர்க்கவும் சிறிது வதக்கவும் வெங்காயத்தை சேர்க்கவும் வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும் தக்காளி சேர்க்கவும் தக்காளி நன்றாக மசியும் வரை வதக்கவும் மிளகாய் பொடி மற்றும் கரம் மசாலாவை சேர்க்கவும் நன்றாக கிளறவும் கெச்சப் மற்றும் சில்லி சாஸ் சேர்க்கவும் கொத்தமல்லி இலை, புதினா இலையை சேர்த்து நன்றாக கிளறவும் சிவப்பு வெங்காயம் மற்றும் குடை மிளகாயை சேர்க்கவும் 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் விரும்பினால் கலர் சேர்த்து கலந்து கொள்ளவும் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன், பொரித்த பரோட்டாவை சேர்க்கவும் கெட்டியாக மாறும் போது, அடுப்பை அணைக்கவும் கொத்தமல்லி இலையை மேலே தூவி இறக்கவும் சில்லி புரோட்டா தயார் Chili parotta ready எலுமிச்சை துண்டு, தயிர் பச்சடி சேர்த்து பரிமாறவும்
One Reply to “சில்லி பரோட்டா”