மேங்கோ லஸ்சி

Mango Lassi – மேங்கோ லஸ்சி

மேங்கோ லஸ்சி தயிர் சேர்த்து செய்யும் ஒரு குளிர்பானம். இது பதப்படுத்தப்பட்ட மாம்பழம் அல்லது நல்ல பழுத்த இனிப்பான மாம்பழம் கொண்டு தயார் செய்யப்படுகின்றது. லஸ்சி எப்போதும் குழந்தைகளுக்கு விருப்பமான குளிர்பானம். இது விருந்து பரிமாறும் போது, டெஸெர்ட் ஆக கொடுக்க சிறந்த தேர்வு. கடையில் வாங்குவதை விட வீட்டில் குறைந்த விலையிலேயே தயார் செய்ய முடியும்.

Find detailed recipe with pictorial explanation in English here.

தேவையான பொருட்கள்

மாம்பழம் – 2 கப் (நறுக்கியது)
தயிர் – 2 கப்
சர்க்கரை (சீனி) – 1/2 கப்
ஏலக்காய் பொடி – 1/2 டீ ஸ்பூன் (விரும்பினால்)

மேங்கோ லஸ்சி செய்முறை

நறுக்கி வைத்திருக்கும் மாம்பழத்தை மிக்சி ஜாரில் எடுத்துக் கொள்ளவும்.
மாம்பழத்தை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் அதில் தயிர் சேர்த்து மறுபடி நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
கடைசியாக சர்க்கரை மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து ஒருமுறை அரைக்கவும்.
மேங்கோ லஸ்ஸி தயார்.
லஸ்சியை கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.
விருப்பப்பட்டால் சிறிது மாம்பழ துண்டுகள் மற்றும் நட்ஸ் சேர்த்து பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்

நீங்கள் உபயோகிக்கும் தயிர் கெட்டியாக இருந்தால், 1/2 கப் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
மாம்பழத்தின் இனிப்பு சுவையைப் பொறுத்து, சர்க்கரை அளவை மாற்றிக்கொள்ளவும்.
லஸ்ஸி தயாரிக்க புளித்த தயிரை உபயோகிக்காதீர்கள்.
கடையில் கொடுப்பதுபோல் ஸ்ட்ரா வைத்துக் கொடுத்தால் குழந்தைகள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.

பட விளக்கம்

One Reply to “மேங்கோ லஸ்சி”

Let me know the outcome of the recipe!