Koli Pirattal – கோழி பிரட்டல்
கோழி பிரட்டல் ஒரு கெட்டியான குழம்பு வகை. இந்த குழம்பு சாதமுடன் பிரட்டி சாப்பிட்டவும், தோசை மற்றும் பரோட்டாவிற்கு தொட்டுக் கொள்ளவும் அருமையாக இருக்கும். இந்த பிரட்டலுக்கு நாட்டுக் கோழியை எலும்புடன் சமைத்தால் நச்சென்று இருக்கும். என் கணவருக்கு நாட்டு கோழி மிகவும் பிடிக்கும், அதுவும் பாரம்பரிய முறையில் சமைப்பதையே விரும்புவார். அதனால் மண்சட்டியில் சமைத்திருக்கிறேன்.
Find Recipe in English here.
தேவையான பொருட்கள்
கோழி – 1/2 கிலோ
சின்ன வெங்காயம் – 1/2 கப் (நறுக்கியது)
தக்காளி – 1
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டேபிள் ஸ்பூன்
மிளகு – 2 டீ ஸ்பூன் (தட்டியது)
சீரகம் – 2 டீ ஸ்பூன் (தட்டியது)
குழம்பு மசால் – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய்தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்
நல்லெண்ணய் – 3 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 இணுக்கு
வரமிளகாய் – 2
சோம்பு – 1/2 டீ ஸ்பூன்
பட்டை – 1/2 இன்ச் குச்சி
அன்னாசி பூ – 1/2
உப்பு தேவையான அளவு
கோழி பிரட்டல் செய்முறை
குழம்பு சட்டியில் எண்ணெய் சேர்த்து சூடு பண்ணவும்.
எண்ணெய் காய்ந்ததும் பட்டை, அன்னாசி பூ, வரமிளகாய், சோம்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும்.
நறுக்கி வைத்த வெங்காயத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்று வதங்கியவுடன் நறுக்கிய தக்காளியை சேர்த்து கரையும் வரை வதக்கவும்.
மிளகுத்தூள், சீரகத்தூள், குழம்பு மசால், மிளகாய்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும்.
சுத்தம் செய்த கோழியை சேர்த்து மசாலுடன் நன்கு கலக்குமாறு பிரட்டவும்.
குழம்பு சட்டியைத் தட்டு கொண்டு மூடி எண்ணெய் வெளியேறும் வரை சிறு தீயில் 5 நிமிடம் சமைக்கவும்.
ஒரு கப் அளவு தண்ணீர் சேர்த்து முழு தீயில் கோழி வேகும் வரை சமைக்கவும் (10 – 15 நிமிடம்).
குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும்.
குழம்பு கெட்டியானவுடன் மீண்டும் தட்டு கொண்டு மூடி மிகச்சிறு தீயில் குழம்பில் வைத்து எண்ணெய் வெளியேற விடவும்.
கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்.
கோழி பிரட்டல் தயார்.
கூடுதல் குறிப்புகள்
இது மிகவும் எளிய முறையில், சமையல் அனுபவம் அதிகம் இல்லாதவர்கள் கூட செய்யக்கூடியது.
நான் மண் சட்டியில் சமைத்துள்ளேன், நீங்கள் வேறு பாத்திரத்திலும் சமைக்கலாம்.
One Reply to “கோழி பிரட்டல்”