நீர் மோர்

Neer Moru – Buttermilk – நீர் மோர்

நீர் மோர் என்பது பாரம்பரியமான குளிர்ச்சியான பானம். கோடைகாலங்களில் உடல் சூட்டை குறைக்க மோர் சிறந்த பானம். நாவறட்சியை தடுக்க மோர் உதவும். கிராமங்களில் மற்றும் சென்னையில் சில இடங்களில் கோடை காலங்களில் மோர்ப்பந்தல் அமைத்து இலவசமாக மோர் கொடுப்பது வழக்கம்.

Find recipe in English here.

தேவையான பொருட்கள்

கெட்டி தயிர் – 1 கப்
பச்சை மிளகாய் – 1
கருவேப்பிலை – 1 + 1 இணுக்கு
இஞ்சி – 1/2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை – 1/2 டேபிள் ஸ்பூன்
வறுத்த சீரக பொடி – 1/2 டீ ஸ்பூன்
தண்ணீர் – 1 கப்
எண்ணெய் – 1 டீ ஸ்பூன்
கடுகு – 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/4 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

நீர் மோர் செய்முறை

கெட்டித்தயிரை மிக்சி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்.
அதனுடன் 1 இணுக்கு கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, நறுக்கிய இஞ்சி மற்றும் நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து கொள்ளவும்.
மேலும் சிறிது உப்பு மற்றும் வறுத்த சீரக பொடியையும் சேர்த்து கொள்ளவும்.
அனைத்தையும் நன்றாக அரைத்து கொள்ளவும்.
இப்போது 1 கப் தண்ணீர் சேர்த்து மறுபடி அரைத்து கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் வடிகட்டி கொண்டு மோரை வடிகட்டி கொள்ளவும்.
வடிகட்டியில் உள்ள கழிவை கீழே கொட்டி விடலாம்.
ஒரு சிறு கடாயை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடுபடுத்தவும்.
அதில் எண்ணெய் ஊற்றவும்.
எண்ணெய் சூடானதும், கடுகு சேர்க்கவும்.
கடுகு வெடிக்கும் போது, கருவேப்பிலை சேர்க்கவும்.
கருவேப்பிலை வெடித்ததும் அடுப்பை அணைக்கவும்.
அதனுடன் பெருங்காயப்பொடியை சேர்த்து கலக்கவும்.
வதக்கிய அனைத்தையும் மோருடன் சேர்த்து கலக்கவும்.
சுவையான நீர் மோர் தயார்.
ஒரு டம்ளரில் மோரை ஊற்றி பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்

குழந்தைகளுக்கு தயாரிக்கும் போது அல்லது வயிற்று புண் இருப்பவர்கள் பச்சை மிளகாயை தவிர்க்கவும்.
சீரகப்பொடி உடலுக்கு குளிர்ச்சி தரும்.
மோரை தாளிக்காமல் அப்படியே குடிக்கலாம் / பரிமாறலாம்.

பட விளக்கம்

One Reply to “நீர் மோர்”

Let me know the outcome of the recipe!