பொரித்த புடலங்காய்

Pudalangai Rings Fry – பொரித்த புடலங்காய்

பொரித்த புடலங்காய் எளிதில் மிக குறைந்த நேரத்தில் செய்யக் கூடிய உணவு. இது குழந்தைகள் விரும்பி உண்ணக் கூடிய ஒன்று. என் குழந்தைகளுக்கு புடலங்காய் பிடிக்காது ஆனால் அதை பொரிக்கும் போது மிகவும் விரும்பி உண்பர். இந்த பொரியல் புளிக்குழம்பு மற்றும் சாதம் சேர்த்து சாப்பிட பொருத்தமாக இருக்கும்.

Find recipe in English here.

தேவையான பொருட்கள்

புடலங்காய் – 200 கிராம்
கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்
சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 டீ ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 டீ ஸ்பூன்
கருவேப்பிலை – 1 இணுக்கு (நறுக்கியது)
எலுமிச்சை சாறு – 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயம் – 1/4 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

பொரித்த புடலங்காய் செய்முறை

மசாலா தயாரித்தல்

புடலங்காயின் தோலை சீவிக்கொள்ளவும்.
தோல் சீவிய புடலங்காயை வட்ட வடிவ துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
நடுவில் உள்ள விதையை வெளியே எடுத்து விடவும்.
ஒரு பாத்திரத்தில் வெட்டிய புடலங்காயை எடுத்து, அதனுடன் உப்பு சேர்க்கவும்.
நன்றாக கலக்கி 15 நிமிடம் ஊறவிடவும்.
புடலங்காயில் இருந்து தண்ணீர் வெளியேறும்.
வேறு ஒரு பாத்திரத்தில், அரிசி மாவு, கடலை மாவு மற்றும் சோள மாவை எடுத்துக்கொள்ளவும்.
அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத்தூள் சேர்க்கவும்.
மேலும் நறுக்கிய கருவேப்பிலையை சேர்த்து நன்றாக கிளறவும்.
இதனுடன் உப்பில் ஊறிய புடலங்காயை தண்ணீர் வடித்து சேர்த்துக்கொள்ளவும்.
மாவு நன்றாக கலக்கும்படி கிளறவும்.
தண்ணீர் தேவைப்பட்டால் சேர்த்துக்கொள்ளவும்.

புடலங்காய் பொரித்தல்

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடு படுத்தவும்.
எண்ணெய் நன்றாக சூடேறியதும், அதில் மசாலா கலந்த புடலங்காய் துண்டுகளை போடவும்.
நிறம் மாறும் வரை பொரிக்கவும். இடை இடையே திருப்பி விடவும்.
அனைத்து புடல்ங்காயையும் பொரித்து கொள்ளவும்.
பொரித்த புடலங்காய் தயார்.
இதை சாதம், புளிக்குழம்புடன் சேர்த்து பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்

புடலங்காயை பிரட்டும் போது நிறைய தண்ணீர் சேர்க்காமல் இருந்தால் மொறு மொறுப்பாக இருக்கும்.
புடலங்காய் துண்டுகள் பெரியதாக இருந்தால் இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பட விளக்கம்

புடலங்காயை வெட்டுதல்

மசாலா கலவை தயாரித்தல்

பொரித்தல்

One Reply to “பொரித்த புடலங்காய்”

Let me know the outcome of the recipe!