Aloe Vera Juice – கற்றாழை ஜூஸ்
கற்றாழை ஜூஸ் ஒரு சத்தான பானம். கற்றாழை உடல் சூடு மற்றும் நெஞ்செரிச்சல் குறைக்க உதவும். சக்கரை நோயாளிகள் இதை தொடர்ந்து அருந்தி வர சக்கரை அளவு சீராக இருக்கும். கற்றாழை ஜூஸ் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் சிறந்த பலன் கிடைக்கும்.
கற்றாழையின் பலன்கள் இங்கே.
Find recipe in English here.
தேவையான பொருட்கள்
கற்றாழை – 1 (1/2 கப் ஜெல்)
தயிர் – 1/2 கப்
தண்ணீர் – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு
கற்றாழை ஜூஸ் செய்முறை
ஜெல் எடுக்கும் முறை
கத்தி அல்லது கத்தரிக்கோல் கொண்டு கற்றாழையை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
கற்றாழையின் ஓரத்தை வெட்டி விரித்துக்கொள்ளவும்.
ஒரு ஸ்பூன் கொண்டு ஜெல்லை வழித்து எடுக்கவும்.
அனைத்து ஜெல்லையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
ஜெல் சுத்தம் செய்தல்
கற்றாழை ஜெல் வழவழப்பாக இருக்கும்.
அதை ஒரு வடிகட்டிக்கு மாற்றி, ஓடும் நீரில் நன்றாக அலசவும்.
ஜூஸ் செய்முறை
ஜெல்லை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
உப்பு மற்றும் ஜெல்லை மிக்சி ஜாரில் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
தயிர் மற்றும் தண்ணீரை சேர்த்து நன்றாக அரைக்கவும்.
Aloe Vera ஜூஸ் தயார்.
கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.
One Reply to “கற்றாழை ஜூஸ்”