Boondi Ladoo – பூந்தி லட்டு
பூந்தி லட்டு, லட்டு வகைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்று. இந்த லட்டு செய்ய நிறைய வேலை இருப்பது போன்று இருந்தாலும், இதை செய்வது மிக எளிது. இது என் மகனுக்கு மிகவும் பிடித்த லட்டு. நான் அவனை லட்டு என்று அடிக்கடி செல்லமாக அழைப்பேன். அவன் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் இந்த லட்டு கண்டிப்பாக வேண்டும் என கேட்டு வாங்கிவிடுவான்.
15 லட்டு வரை கிடைக்கும்.
Find recipe in English here.
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 1 1/4 கப்
சர்க்கரை – 1 1/2 கப்
தண்ணீர் – சர்க்கரை மூழ்கும் அளவு
குங்குமப்பூ – 5 – 10 இழை
கல்கண்டு – 1 டீ ஸ்பூன் (விருப்பமிருந்தால்)
முந்திரி பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 3
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
பூந்தி லட்டு செய்முறை
மாவு செய்முறை
கடலை மாவை சலித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை கரைக்கவும்.
நன்றாக தோசை மாவு பதம் வந்தவுடன் நிறுத்தவும்.
மாவு தயார்.
பூந்தி செய்முறை
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும்.
பூந்தி கரண்டியை எண்ணெய்க்கு சிறிது மேலே பிடித்துக்கொள்ளவும்.
ஒரு கரண்டி மாவு எடுத்து பூந்தி கரண்டியில் ஊற்றவும்.
பூந்தி மொறுமொறுப்பு ஆகும் முன் எடுத்து விடவும்.
பொரித்த பூந்தி தயார்.
சர்க்கரை பாகு காய்ச்சுதல்
சர்க்கரை, குங்குமப்பூவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
அதில் சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
ஒரு கம்பி பதம் வந்தவுடன் மிதமான சூட்டிற்கு அடுப்பை மாற்றிவிடவும்.
பாகு கொஞ்சம் வெள்ளை நிறத்தில் உறைய ஆரம்பிக்கும்.
இப்போது அடுப்பை அணைத்துவிடவும்.
பாகு தயார்.
இனிப்பு பூந்தி செய்முறை
பொரித்து வைத்திருக்கும் பூந்தியை, பாகுடன் சேர்த்து நன்றாக கலக்கவும்.
ஒரு சிறிய கடாயில், நெய் ஊற்றி முந்திரி, உலர் திராட்சையை பொன்னிறமாக வறுக்கவும்.
அதன்பின் அவற்றை பூந்தியுடன் சேர்க்கவும்.
ஏலக்காய் மற்றும் கல்கண்டை லேசாக இடித்து நொறுக்கி, பூந்தியுடன் சேர்க்கவும்.
அனைத்தும் நன்றாக கலக்கும்வரை கிண்டவும்.
பூந்தியை நன்றாக ஆறவிடவும்.
இனிப்பு பூந்தி தயார்.
லட்டு செய்முறை
சிறிது பூந்தியை கையில் எடுத்து உருண்டையாக பிடிக்கவும்.
எல்லா பூந்தியையும் உருண்டையாக உருட்டிக் கொள்ளவும்.
குறைந்தது 30 நிமிடம் அல்லது லட்டு உலரும் வரை வெளியில் வைத்திருக்கவும்.
பூந்தி லட்டு தயார்.
கூடுதல் குறிப்புகள்
லட்டு பிடிக்கும்போது இனிப்பு பூந்தி கலவை உருண்டை பிடிக்க கடினமாக இருந்தால், 1 டேபிள் ஸ்பூன் அளவு தண்ணீர் சேர்த்து லேசாக சூடு படுத்தவும்.
பூந்தி பொரிக்கும்போது, அடுப்பில் தீயை முழுவதுமாக வைத்துக்கொண்டால், பூந்தி நல்ல வட்ட வடிவில் வரும்.
படவிளக்கம்
மாவு செய்முறை
கடலை மாவை சலித்துக்கொள்ளவும் சலித்த மாவு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்; தண்ணீர் சேர்த்து மாவை கரைக்கவும் தோசை மாவு பதம் வந்தவுடன் நிறுத்தவும்
பூந்தி செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும் பூந்தி கரண்டியை எண்ணெய்க்கு சிறிது மேலே பிடித்துக்கொள்ளவும் ஒரு கரண்டி மாவு எடுத்து பூந்தி கரண்டியில் ஊற்றவும் பூந்தி மொறுமொறுப்பு ஆகும் முன் எடுத்து விடவும் பூந்தி தயார்
சர்க்கரை பாகு காய்ச்சுதல்
குங்குமப்பூ, சர்க்கரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும் சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் கம்பி பதம் வந்தவுடன் மிதமான சூட்டிற்கு அடுப்பை மாற்றிவிடவும் பாகு கொஞ்சம் வெள்ளை நிறத்தில் உறைய ஆரம்பிக்கும் போது அடுப்பை அணைத்துவிடவும்
இனிப்பு பூந்தி செய்முறை
பொரித்து வைத்திருக்கும் பூந்தியை, பாகுடன் சேர்த்து நன்றாக கலக்கவும் கடாயில், நெய் ஊற்றி சூடுபடுத்தவும் முந்திரி சேர்க்கவும் உலர் திராட்சையை சேர்க்கவும் பொன்னிறமாக வறுக்கவும் பூந்தியுடன் சேர்க்கவும் கல்கண்டை லேசாக இடித்து நொறுக்கி கொள்ளவும் பூந்தியுடன் சேர்க்கவும் ஏலக்காய் லேசாக இடித்து கொள்ளவும் பூந்தியுடன் சேர்க்கவும் நன்றாக கலக்கவும்
லட்டு செய்முறை
சிறிது பூந்தியை கையில் எடுத்து கொள்ளவும் உருண்டையாக பிடிக்கவும் லட்டு தயார். ஒரு தட்டில் வைக்கவும் 30 நிமிடம் உலர விடவும் Boondhi laddu ready பூந்தி லட்டு தயார்