(Milk Sarbath) பால் சர்பத்
பால் சர்பத் ஒரு சத்து மிக்க பானம். இது முற்றிலும் இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றது. சர்பத் எலுமிச்சை சாறு கொண்டு தயாரிக்கப்படும். ஆனால் இது பால் கொண்டு தயாரிக்கப்படுகின்றது. இதில் பால் தவிர பாதாம் பிசின், பேசில் விதை மற்றும் நன்னாரி சிரப் சேர்க்கப்படுகிறது. இவை அனைத்தும் உடல் சூட்டை தணிக்க உதவுவதால், இது கோடை காலத்திற்கேற்ற பானம்.
Find English Recipe here.
தேவையான பொருட்கள்
பால் – 1 லிட்டர் (5 கப்)
பேசில் / சப்ஜா விதை – 1/2 டேபிள் ஸ்பூன்
பாதாம் பிசின் – 1/2 டேபிள் ஸ்பூன்
நன்னாரி சிரப் – 1/4 கப் + சிறிது
குங்குமப்பூ – 1 டீ ஸ்பூன் + அலங்கரிக்க/ மேலே தூவ
பாதாம் சீவல் – சிறிது அலங்கரிக்க/ மேலே தூவ
பால் சர்பத் செய்முறை
முன் தயாரிப்பு
பாதாம் பிசினை ஒரு கிண்ணத்தில் எடுத்து, தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவிடவும்.
பேசில் விதையை ஒரு கிண்ணத்தில் எடுத்து, தண்ணீர் ஊற்றி 15 நிமிடம் ஊறவிடவும்.
பால் காய்ச்சுதல்
ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை ஊற்றி, முழு தீயில் வைத்து கொதிக்க விடவும்.
பால் பொங்கி வரும்போது, தீயை பாதியாக குறைக்கவும்.
ஆடை சேரும்போது, பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டாமல் தள்ளி விடவும்.
பால் அளவு 600 மிலி அளவு வரும்போது, அடுப்பை அணைத்து விடவும்.
குங்குமப்பூவை பாலில் சேர்த்து கலக்கவும்.
பாலை நன்றாக ஆறவிடவும்.
குங்குமப்பூவின் நிறமும் மணமும் பாலில்இறங்கி விடும்.
பால் தயார்.
பால் கலவை தயாரித்தல்
மிக்சி ஜாரில், 1.5 டேபிள் ஸ்பூன் அளவு ஊறவைத்த பேசில் விதையையும், அதே அளவு ஊறவைத்த பாதாம் பிசினையும் எடுக்கவும்.
மேலும் 1/4 கப் நன்னாரி சிரப்பையும், காய்ச்சி ஆறவைத்த பாலையும் ஊற்றவும்.
அனைத்தும் நன்றாக கலக்கும் வரை அரைத்துக் கொள்ளவும்.
பால் கலவை தயார்.
பால் சர்பத் தயாரித்தல்
கண்ணாடி கிளாசில் ஊறவைத்த பேசில் விதை மற்றும் பாதாம் பிசின் தலா 1 டீ ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்.
அதனுடன் 1 டீ ஸ்பூன் அளவு நன்னாரி சிரப் ஊற்றவும்.
இதற்கு மேல், தயார் செய்து வைத்திருக்கும் பால் கலவையை, கிளாஸ் நிறையும் வரை ஊற்றவும்.
குங்குமப்பூ மற்றும் பாதாம் சீவலை மேலே தூவவும்.
Paal Sarbath தயார்.
கூடுதல் குறிப்புகள்
நான் எப்போதும் வீட்டில் தயார் செய்த நன்னாரி சிரப்பையே உபயோகிப்பேன்.
நல்ல சுவைக்கு கொழுப்பு நீக்கப்படாமல் இருக்கும் பாலை உபயோகிக்க வேண்டும்.
படவிளக்கம்
பாதாம் பிசின் செய்முறை
பாதாம் பிசின் தண்ணீர் சேர்த்து இரவு முழுவதும் ஊறவிடவும் பாதாம் பிசின்
பேசில் விதை செய்முறை
பேசில் விதை தண்ணீர் சேர்த்து 15 நிமிடம் ஊறவிடவும் பேசில் விதை
பால் செய்முறை
பாத்திரத்தில் 1 லிட்டர் பாலை ஊற்றி, முழு தீயில் கொதிக்க விடவும் பால் பொங்கி வரும்போது, தீயை பாதியாக குறைக்கவும். ஆடை சேரும்போது, பாத்திரத்தின் ஓரத்தில் ஒட்டாமல் தள்ளி விடவும் பால் அளவு வரும்போது, அடுப்பை அணைத்து விடவும் குங்குமப்பூவை பாலில் சேர்த்து கலக்கவும் நன்றாக ஆறவிடவும்
பால் தயார்
பால் கலவை தயாரித்தல்
மிக்சி ஜாரில் பேசில் விதையையும், பாதாம் பிசினையும் எடுக்கவும் நன்னாரி சிரப்பை ஊற்றவும் காய்ச்சி ஆறவைத்த பாலையும் ஊற்றவும் நன்றாக கலக்கும் வரை அரைத்துக் கொள்ளவும்
பால் கலவை தயார்
பால் சர்பத் செய்முறை
கிளாசில் பேசில் விதை, பாதாம் பிசின் நன்னாரி சிரப்பை எடுத்துக்கொள்ளவும் பால் கலவையை, கிளாஸ் நிறையும் வரை ஊற்றவும் குங்குமப்பூ மற்றும் பாதாம் சீவலை மேலே தூவவும் பால் சர்பத் தயார் Paal Sarbath Milk Sarbath பால் சர்பத்
One Reply to “பால் சர்பத்”