கொத்தமல்லி சாதம் – Cilantro Rice
கொத்தமல்லி சாதம் ஒரு வகையான கலந்த சாதம். இது கொத்தமல்லி இலை, இஞ்சி மற்றும் புளி போன்ற எளிய பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகின்றது. மதிய உணவிற்கு செய்ய எதுவும் இல்லையென்றால், இந்த சாதம்தான் எனக்கு கைகொடுக்கும். இது தயாரிக்க மிக குறைந்த நேரமே தேவைப்படும். இதை சாப்பிட சைடு டிஷ் எதுவும் தேவைப்படாது.
Find recipe in English here.
தேவையான பொருட்கள்
அரிசி – 1/2 கப்
கொத்தமல்லி இல்லை – 1 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
இஞ்சி – 1/2 டேபிள் ஸ்பூன்
புளி – 1 டீ ஸ்பூன்
கருவேப்பிலை – 1 இணுக்கு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு உளுந்து – 1/4 டீ ஸ்பூன்
குழம்பு கடலைப்பருப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 2
பெருங்காயம் – 1/4 டீ ஸ்பூன்
முந்திரி / வேர்க்கடலை – 1.5 டேபிள் ஸ்பூன் (விருப்பமிருந்தால்)
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி சாதம் செய்முறை
அரிசியை வேகவைத்து சாதத்தை நன்றாக ஆறவிடவும்.
கொத்தமல்லி இலையை தண்ணீரில் அலசி, சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
மிக்சி ஜாரில், கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய், புளி, இஞ்சி மற்றும் உப்பு சேர்க்கவும்.
தண்ணீர் சேர்க்காமல் நன்றாக மையாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து சூடுபடுத்தவும்.
கடுகு, உளுந்து மற்றும் குழம்பு கடலைப்பருப்பு சேர்க்கவும்.
கடுகு வெடித்தவுடன், கருவேப்பிலையை சேர்க்கவும்.
கருவேப்பிலை வெடித்தவுடன், வரமிளகாய் மற்றும் முந்திரி பருப்பை சேர்க்கவும்.
சிறிது வதக்கி, பெருங்காயம் சேர்த்து நன்றாக கலக்கவும்.
இப்போது அரைத்து வைத்திருக்கும் கொத்தமல்லி விழுது சேர்த்து ஒருநிமிடம் வதக்கவும்.
கடைசியாக வேகவைத்த சாதத்தை சேர்த்து, சாதம் உடையாமல் கவனமாக கிளறவும்.
அரைத்த விழுது மற்றும் சாதம் நன்றாக கலக்கும் வரை கிளறி, அடுப்பை நிறுத்தவும்.
கொத்தமல்லி சாதம் தயார்.
கூடுதல் குறிப்புகள்
1/2 கப் அரிசியை வேகவைக்கும்போது 1.5 கப் அளவு சாதம் கிடைக்கும்.