சீஸ் & வெஜ் பராத்தா

சீஸ் & வெஜ் பராத்தா

சீஸ் & வெஜ் பராத்தா என்பது கோதுமை மாவினால் ஆன சப்பாத்தியின் உள்ளே சீஸ் மற்றும் காய்கறிகளை பொதிந்து வைத்து சமைப்பது. இந்த பதார்த்தத்தை குழந்தைகள் விரும்பி உண்பர், எளிதில் வயிற்றை நிறைக்கக்கூடிய சத்தான உணவு. உங்களுக்கு விருப்பமான எந்த காய்கறிகளையும் இதில் சேர்க்கலாம். மிக குறைந்த நேரத்தில் எளிமையாக தயாரிக்கக்கூடிய இந்த உணவினை வெளியூர் பயணங்கள் மற்றும் சுற்றுலா செல்வதற்கும் எடுத்துச் செல்லலாம்.

Find recipe in English here.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1 கப்
சூடான எண்ணெய் – 2 டீ ஸ்பூன்
சீஸ் – 1/2 கப்
கேரட் – 1
பீன்ஸ் – 3
பச்சை குடை மிளகாய் – 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
சாட் மசாலா – 1/4 டீ ஸ்பூன்
சீராக பொடி – 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் பொடி – 1/4 டீ ஸ்பூன்
சீஸ் துண்டு – 3
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி இலை – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு தேவையான அளவு

சீஸ் & வெஜ் பராத்தா செய்முறை

மாவு தயாரித்தல்

கோதுமை மாவு, உப்பு மற்றும் சூடான எண்ணையை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
வெதுவெதுப்பான தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, மாவை பிசைய வேண்டும்.
5 நிமிடம் வரை பிசைந்தால் மாவு நல்ல மிருதுவாக கிடைக்கும்.
மாவை சரி சமமாக 3 உருண்டையாக பிரித்துக்கொள்ளவும்.

காய்கறி தயாரித்தல்

வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
கேரட் தோலை சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
பீன்ஸை தண்ணிரில் கழுவி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
கேரட் மற்றும் பீன்ஸை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

ஸ்டஃபிங் தயாரித்தல்

ஒரு பாத்திரத்தில் வேகவைத்த காய்கறிகள், வெங்காயம் மற்றும் குடை மிளகாய் எடுத்து கொள்ளவும்.
அதனுடன் சீஸ், சாட் மசாலா, சீராக பொடி, மிளகாய் பொடி, கொத்தமல்லி இலை, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும்.
அனைத்தையும் நன்றாக பிசைந்து, 3 உருண்டைகளாக மாற்றிக்கொள்ளவும்.

பராத்தா தேய்த்தல்

ஒரு மாவு உருண்டை எடுத்து, மாவில் பிரட்டி கொள்ளவும்.
வட்ட வடிவில் நன்றாக தேய்க்கவும்.
அதன்மேல் சிறிது எண்ணெய் தடவிக்கொள்ளவும்.
காய்கறி ஸ்டஃபிங் ஒரு உருண்டை எடுத்து நடுவில் வைத்து கொள்ளவும்.
அதன்மேல் சீஸ் துண்டு ஒன்றை வைத்து படத்தில் காட்டியபடி மடிக்கவும்.

பராத்தா செய்முறை

தோசைக்கல்லை மிதமான தீயில் காயவைத்து எண்ணெய் தடவிக்கொள்ளவும்.
அதில் ஒரு பராத்தா வைக்கவும்.
அதன்மேல் லேசாக எண்ணெய் தடவவும்.
இரண்டு பக்கமும் நன்றாக வேகவைக்கவும்.
வெளியே எடுத்த பின், இரண்டு துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
சீஸ் & வெஜ் பராத்தா தயார்.

கூடுதல் குறிப்புகள்

நான் மொஸெரெல்லா (Mozzarella) சீஸ் உபயோகித்துள்ளேன். நீங்கள் செடார் (cheddar) வேண்டுமென்றால் உபயோகிக்கலாம்.
கார நெடி குறைவாக உள்ள வெங்காயத்தை உபயோகிக்கவும்.
பச்சை குடை மிளகாயுடன், சிவப்பு குடை மிளகாயும் சேர்த்து கொள்ளலாம்.

படவிளக்கம்

தேவையான பொருட்கள்

ஸ்டஃபிங் தயாரித்தல்

தேவையான பொருட்கள்

One Reply to “சீஸ் & வெஜ் பராத்தா”

Let me know the outcome of the recipe!