Carrot Juice – கேரட் ஜூஸ்
கேரட் ஜூஸ் ஒரு சத்துமிக்க பானம். இது எளிதாகவும் தயாரிக்கக்கூடியது, இந்த பானம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. என்னுடைய கல்லூரி பழச்சாறு கடையில் இதையே விரும்பி வாங்கி குடிப்பேன். இதில் இனிப்பு எதுவும் சேர்க்காமல் அப்படியே குடிக்கலாம். குழந்தைகளுக்காக சர்க்கரை அல்லது தேன் கலந்தும் கொடுக்கலாம். பெரியவர்கள் மட்டுமே குடிப்பதென்றால், சிறிது இஞ்சி, கொத்தமல்லி இலையின் தண்டு சேர்த்து அரைத்து சாறு எடுத்து பருகலாம். இது சுவையை கூட்டுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் உதவும்.
Find carrot juice recipe in English here.
தேவையான பொருட்கள்
கேரட் – 1/4 கிலோ (4 பெரியது)
தண்ணீர் – 1 கப்
தேன் – 2 டேபிள் ஸ்பூன் (விரும்பினால்)
கேரட் ஜூஸ் செய்முறை
கேரட்டின் தோலை சீவிக்கொள்ளுங்கள்.
பின்னர் கேரட்டை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள்.
நறுக்கிய கேரட்டை, மிக்சி ஜூஸ் ஜாரில் எடுத்து கொள்ளவும்.
முதலில் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
பின்னர் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்றாக விழுது போல் அரைக்கவும்.
ஒரு பாத்திரம் மற்றும் பெரிய வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
அரைத்து வைத்திருக்கும் கேரட் விழுதை வடிகட்டியில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும்.
சாறு வடிகட்டியிலிருந்து அதுவாகவே வடிய ஆரம்பிக்கும்.
கை அல்லது கரண்டி வைத்து அழுத்தி சாறு நன்றாக வடிய விடவும்.
இப்போது இதை இனிப்பு எதுவும் சேர்க்காமல் அப்படியே பருகலாம்.
இனிப்பு சேர்க்க வேண்டும் என்றால், தேனை இப்போது சேர்க்கவும்.
கரண்டி வைத்து தேன் கரையும் வரை நன்றாக கலக்கவும்.
இப்போதுள்ள சாறில், சிறிது கேரட் துகளும் சேர்த்திருக்கும்.
தனியாக சாறு மட்டுமே வேண்டுமென்றால், டீ வடிகட்டி வைத்து மறுபடி வடிகட்டி கொள்ளவும்.
கேரட் ஜூஸ் / carrot juice தயார்.
ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.
கூடுதல் குறிப்புகள்
தேவையென்றால் குளிர்ந்த நீர், பனிக்கட்டி சேர்த்து அரைத்து, குளிர்ச்சியாக பரிமாறலாம்.
தேனிற்கு பதிலாக சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.
படவிளக்கம்
தேவையான பொருட்கள் தோலை சீவி கொள்ளவும் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள் மிக்சி ஜூஸ் ஜாரில் எடுத்து கொள்ளவும் தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும் தண்ணீர் சேர்த்து விழுது போல் அரைக்கவும் பாத்திரம் மற்றும் பெரிய வடிகட்டி கேரட் விழுதை வடிகட்டியில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றவும் சாறு வடிகட்டியிலிருந்து வடிகிறது அழுத்தி சாறு நன்றாக வடிய விடவும் ஜூஸ் தயார், இதை அப்படியே பருகலாம் வேண்டும் என்றால், தேனை சேர்க்கவும் தேன் கரையும் வரை கலக்கவும் சிறிது கேரட் துகளும் சேர்த்திருக்கும். டீ வடிகட்டி வைத்து மறுபடி வடிகட்டி கொள்ளவும் Carrot Juice ready கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும் காரட் ஜூஸ் தயார்
Discover more from Nish's Recipes
Subscribe to get the latest posts sent to your email.
One Reply to “கேரட் ஜூஸ்”