கம்பு பணியாரம்

Kambu Paniyaram – கம்பு பணியாரம்

கம்பு பணியாரம் ஒரு பாரம்பரிய இனிப்பு பதார்த்தம். கம்பு தானியம் (pearl millet) நிறைய சத்துக்கள் கொண்ட சிறுதானியம். இந்த பணியாரத்தை கருப்பட்டி அல்லது வெல்லம் சேர்த்து தயாரிக்கலாம். நான் கருப்பட்டியை வைத்து செய்வதையே விரும்புவேன். கம்பு மற்றும் கருப்பட்டி சேரும்போது கிடைக்கும் சுவை அலாதியானது. என் கணவருக்கு கருப்பட்டி மிகவும் பிடிக்கும். அதனால் எப்போதெல்லாம் முடியுமோ, அப்போது கருப்பட்டி வைத்து பதார்த்தம் செய்துவிடுவேன்.

தேவையான பொருட்கள்

கம்பு தோசை மாவு – 1 கப்
கருப்பட்டி (பனை வெல்லம்) – 1 கப்
எண்ணெய் – தேவையான அளவு

கம்பு பணியாரம் செய்முறை

பணியார மாவு செய்முறை

கம்பு தோசை மாவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.
கருப்பட்டியை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து, அதில் 1/4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
பாத்திரத்தை நன்றாக சூடு படுத்தவும்.
கருப்பட்டி நன்றாக கரைந்தவுடன், அடுப்பை அணைத்துவிடவும்.
தண்ணிரில் கரைந்த கருப்பட்டியை, ஒரு வடிகட்டி கொண்டு தோசை மாவு இருக்கும் பாத்திரத்தில் வடித்து சேர்க்கவும்.
தோசை மாவும், கருப்பட்டியும் நன்றாக கலக்கும் வரை கிண்டவும்.
பணியார மாவு தயார்.

பணியாரம் செய்முறை

பணியாரச் சட்டியை அடுப்பில் வைத்து சூடுபடுத்தவும்.
ஒவ்வொரு குழியிலும் ஒரு துளி எண்ணெய் சேர்க்கவும்.
அடுப்பில் தீயை மிதமாக வைத்துக்கொள்ளவும்.
இப்போது பணியார மாவை ஒவ்வொரு குழியிலும் 3/4 அளவு நிறையும் வரை ஊற்றவும்.
ஒரு நிமிடம் கழித்து, பணியாரத்தை சுற்றி எண்ணெய் ஊற்றவும்.
ஓரம் நன்றாக வெந்தவுடன், பணியாரத்தை திருப்பி விடவும்.
மறுபடி பணியாரத்தை சுற்றி எண்ணெய் ஊற்றவும்.
பணியாரத்தை நன்றாக வேக விடவும்.
வெந்த பணியாரத்தை வெளியில் எடுத்து விடவும்.
இருக்கும் அனைத்து மாவையும் இதே போல் செய்து கொள்ளவும்.
கம்பு பணியாரம் தயார்.
இந்த பணியாரத்தை காலை உணவாகவோ இல்லை சிற்றுண்டியாகவோ பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்

கருப்பட்டி கரைவதற்கு கொஞ்சம் தண்ணீர் போதும். அதிகம் சேர்க்க வேண்டாம்.
கருப்பட்டி கரையும் வரை காய்ச்சினால் போதும். கம்பி பதம் வேண்டாம்.
தீயை குறைவாக வைத்து சுடவில்லையென்றால், பணியாரம் கருகிவிடும்.

படவிளக்கம்

Let me know the outcome of the recipe!