Instant Mango Pickle

மாங்காய் ஊறுகாய்

Instant Mango Pickle – மாங்காய் ஊறுகாய்

மாங்காய் ஊறுகாய் மிக எளிமையாக, குறுகிய நேரத்தில் வீட்டில் செய்யக்கூடிய ஊறுகாய். இது எனக்கு மிகவும் பிடித்த ஊறுகாய். என்னுடைய பெரியம்மா இருவர் எனக்காக இதை எப்போதும் செய்து கொடுப்பார்கள். இது குறிப்பிட்ட பருவகாலத்தில் மட்டுமே செய்யக்கூடிய பதார்த்தம். நல்ல தரமான, புளிப்பான காய் கிடைக்கும்போது மட்டுமே நான் இந்த ஊறுகாய் செய்வேன். மாங்காயை சிறிய துண்டுகளாக நறுக்குவதற்கு அதிக நேரம் ஆகும் அனால் ஊறுகாய் செய்ய மிக குறைந்த நேரமே ஆகும்.

Find recipe in English here.

தேவையான பொருட்கள்

மாங்காய் – 2 (3 கப் நறுக்கியது)
நல்லெண்ணெய் – 1/2 கப்
கடுகு – 1 டீ ஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் – 3 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத்தூள் – 1/2 டீ ஸ்பூன்
கருவேப்பிலை – 1 இணுக்கு
உப்பு – தேவையான அளவு

மாங்காய் ஊறுகாய் செய்முறை

மாங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
நறுக்கிய மாங்காயை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் சூடுபடுத்தவும்.
எண்ணெய் சூடானதும், கடுகு, வெந்தயம் சேர்க்கவும்.
கடுகு வெடித்தவுடன், கருவேப்பிலை சேர்க்கவும்.
கருவேப்பிலை வெடிக்கும்போது பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
இப்போது உப்பு, மிளகாய்த்தூள் கலந்த மாங்காயை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கிளறவும்.
மிதமான தீயில் வைத்து 5 – 10 நிமிடம் வரை வேக வைக்கவும்.
அடி பிடிக்காதவாறு நன்றாக கிளறவும்.
மாங்காய் நன்றாக வெந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது ஜாரில் மாற்றவும்.
துணி வைத்து பாட்டிலை மூடி வைக்கவும்.
ஊறுகாய் நன்றாக ஆறியவுடன், மூடி வைத்து மூடவும்.
தயிர் சாதத்துடன் மாங்காய் ஊறுகாய் சேர்த்து பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்

இந்த ஊறுகாய் விரைவில் கெட்டுபோக வாய்ப்புள்ளதால், ஃப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.
நான் வீட்டில் தயாரித்த மிளகாய்த்தூள் உபயோகித்துள்ளேன். உங்கள் காரத்தேவைக்கேற்ப மிளகாய்த்தூள் அளவை மாற்றிக்கொள்ளவும்.
ஊறுகாயை எப்போதும் கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைக்கவும்.

பட விளக்கம்

One Reply to “மாங்காய் ஊறுகாய்”

Let me know the outcome of the recipe!