கம்பு தோசை மாவு

கம்பு தோசை மாவு

கம்பு தோசை மாவு, கம்பு மற்றும் உளுந்து கலந்து செய்யப்படுகிறது. கம்பு தானியம் நிறைய சத்துக்கள் கொண்ட சிறுதானியம். சிறுதானியமான கம்பு புரதசத்து, நார்சத்து, இரும்புசத்து நிறைந்த தானியம். இது இதயம் பலமாக, ரத்த கொதிப்பு சீராக வைக்க மற்றும் கெட்ட கொழுப்பை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றது. இந்த கம்பு மாவு, தோசை பணியாரம் செய்ய உதவுகின்றது.

Find Recipe in English here.

தேவையான பொருட்கள்

கம்பு – 2 கப்
உளுந்து – 1/2 கப்
உப்பு – தேவையான அளவு

கம்பு தோசை மாவு செய்முறை

கம்பு, உளுந்து, இரண்டையும் தண்ணிரில் குறைந்தபட்சம் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
முதலில் உளுந்தை தண்ணிரில் அலசி, கிரைண்டரில் போடவும்.
சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து நன்றாக 50 நிமிடம் வரை பொங்க பொங்க ஆட்டவும்.
உளுந்து ஆட்டியவுடன், அதை ஒரு பாத்திரத்தில் மாற்றுங்கள்.
கம்பு தானியத்தை தண்ணீரில் அலசி, கிரைண்டரில் சேர்க்கவும்.
தண்ணீர் சேர்த்து நெருநெருப்பாக இருக்கும்படி அரைக்கவும்.
அரைத்த கம்பு மாவை உளுந்து மாவுடன் சேர்க்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்த்து, கை வைத்து நன்றாக பிசையவும்.
மாவு தயார். இதை குறைந்தபட்சம் 8 மணி நேரம் புளிக்க விட வேண்டும்.
கம்பு மாவு தயார்.

கூடுதல் குறிப்புகள்

கம்பு மாவு, மிக்சியிலும் அரைக்கலாம்.
மிக்சியில் அரைக்கும் மாவை விட, கிரைண்டரில் அரைக்கும் மாவு சுவையாக இருக்கும்.

படவிளக்கம்

2 Replies to “கம்பு தோசை மாவு”

Let me know the outcome of the recipe!