வெஜ் நூடுல்ஸ்

Veg Noodles – வெஜ் நூடுல்ஸ்

வெஜ் நூடுல்ஸ் அனைத்து குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த உணவு. இது என் குடும்ப நண்பர் ஒருவர் கொடுத்த டிப்ஸ் வைத்து செய்தேன். மிக ருசியாக வந்தது. இது குழந்தைகள் பார்ட்டி அல்லது விருந்துக்கு செய்ய உகந்தது.

Find detailed recipe in English here.

தேவையான பொருட்கள்

ஹக்கா நூடுல்ஸ் – 200 கிராம்
வெங்காயம் – 1/2 வெட்டியது
முட்டைகோஸ் – 1 கப் (மெல்லிதாக வெட்டியது)
முட்டை – 2
கேரட் – 1
பீன்ஸ் – 10
மிளகு பொடி – 1 டீ ஸ்பூன்
வரமிளகாய் துருவல் – 1 டீ ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 1/2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ் – 1 டீ ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

வெஜ் நூடுல்ஸ் செய்முறை

முன் தயாரிப்பு

ஒரு பாத்திரத்தில் தண்ணீர், உப்பு மற்றும் நூடுல்ஸ் சேர்த்து வேகவைக்கவும்.
நூடுல்ஸ் வெந்தவுடன் அடுப்பை அணைத்து தண்ணீரை வடிகட்டி விடவும்.
கேரட்டின் தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
பீன்ஸையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
கேரட், பீன்ஸ் இரண்டையும் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
காய்கறி வெந்தவுடன் அடுப்பை அணைத்து தண்ணீரை வடிகட்டி விடவும்.

முட்டை வதக்கல்

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடு படுத்தவும்.
முட்டையை ஒரு கிண்ணத்தில் உடைத்து ஊற்றி உப்பு, தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
கலக்கிய முட்டையை, கடாயில் ஊற்றவும்.
இப்போது காய்ந்த மிளகாய் துருவலையும், மிளகு தூளையும் சேர்த்து கலக்கவும்.
முட்டை சிறு சிறு துண்டுகளாக ஆகும் வரை நன்றாக கிளறவும்.

நூடுல்ஸ் செய்முறை

நறுக்கிய வெங்காயத்தையும், இஞ்சி பூண்டு விழுதையும் சேர்க்கவும்.
ஒரு நிமிடம் வதக்கிய பின், நறுக்கிய முட்டைகோஸை சேர்க்கவும்.
முட்டைகோஸை ஒருநிமிடம் வதக்கி, வேகவைத்த கேரட் மற்றும் பீன்ஸ் சேர்க்கவும்.
இதனுடன் மீதமுள்ள மிளகுத்தூள், வத்தல் துருவல், உப்பு மற்றும் சோயா சாஸ் சேர்க்கவும்.
அனைத்தையும் நன்றாக கிளறி, வேகவைத்த நூடுல்ஸை சேர்க்கவும்.
நூடுல்ஸ் மற்றும் காய்கறி நன்றாக கலக்கும்படி கடாயை மெதுவாக குலுக்கவும்.
வெஜ் நூடுல்ஸ் தயார்.
இந்த நூடுல்ஸை, தக்காளி சாஸ் அல்லது கெச்சப் சேர்த்து பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்

காய்கறியை அதிகமாக குழையும் அளவு வேகவைக்க வேண்டாம்.
முட்டை வேண்டாம் என்றால், எண்ணெய் கொஞ்சம் அதிகமாக சேர்த்துக்கொள்ளவும்.
கடாய் இல்லையென்றால், பாத்திரத்தை மூடிவைத்து மூடி நூடுல்ஸ் உடையாத படி கலக்கவும்.

பட விளக்கம்

முன் தயாரிப்பு

முட்டை வதக்கல்

நூடுல்ஸ் செய்முறை

One Reply to “வெஜ் நூடுல்ஸ்”

Let me know the outcome of the recipe!