பீட்ரூட் பொரியல்

Beetroot Poriyal – பீட்ரூட் பொரியல்

பீட்ரூட் பொரியல் ஒரு சத்தான பொரியல். இதை மிக குறைந்த நேரத்தில் எளிமையான முறையில் சமைக்கலாம். பீட்ரூட் மிக சத்தான காய்கறி, நார்சத்து இதில் அதிகமாக உள்ளது. இதில் வைட்டமின் பி9 மற்றும் சி, இரும்புச்சத்து அதிகம் உள்ளது. Beetroot பொரியல் பருப்பு சாதம், சாம்பார் சாதம் மற்றும் வத்தகுழம்புடன் சேர்த்து சாப்பிட பொருத்தமாக இருக்கும்.

Find recipe in English here.

தேவையான பொருட்கள்

பீட்ரூட் – 200 கிராம்
தேங்காய் – 1/2 கப் (நறுக்கியது)
சின்ன வெங்காயம் – 1/2 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2-4
வரமிளகாய் – 5
குழம்பு கடலைபருப்பு – 3/4 டேபிள் ஸ்பூன்
உளுந்தம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கடுகு – 1/4 டீ ஸ்பூன்
சீரகம் – 1/4 டீ ஸ்பூன்
பெருங்காயம் – 1/2 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 இணுக்கு
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
தேங்காய் துருவல் – மேல் தூவ (விருப்பினால்)
உப்பு – தேவையான அளவு

பீட்ரூட் பொரியல் செய்முறை

பீட்ரூட் தோலை சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
தண்ணீர், உப்பு சேர்த்து 80% வரை வேக வைத்துக்கொள்ளவும்.
பச்சை மிளகாயை உரலில் இடித்துக்கொள்ளவும்.
தேங்காயை தண்ணீர் சேர்த்து மையாக அரைத்துக்கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில் சூடுபடுத்தவும்.
அதில் கடுகு, சீரகம் சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன், கருவேப்பிலை சேர்க்கவும்.
கருவேப்பிலை வெடித்தவுடன், உளுந்து, வரமிளகாய் மற்றும் குழம்பு கடலைப்பருப்பு சேர்க்கவும்.
இடித்து வைத்திருக்கும் பச்சை மிளகாய் சேர்த்துக்கொள்ளவும்.
ஒரு நிமிடம் வதக்கிய பின், வெட்டி வைத்த வெங்காயத்தை சேர்க்கவும்.
வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்.
இப்போது பெருங்காயம், உப்பு மற்றும் அரைத்து வைத்திருக்கும் தேங்காயை சேர்க்கவும்.
அனைத்தும் நன்றாக கலக்கும் வரை கிளறவும்.
இதனுடன் வேகவைத்த பீட்ரூட்டை சேர்த்து நன்றாக கிளறவும்.
அடுப்பை அணைத்து விட்டு, தேங்காய் துருவல், கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
பீட்ரூட் பொரியல் தயார்.
சாதம் மற்றும் சாம்பாருக்கு இந்த பொரியலை வைத்து பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்

நான் இதில் நல்லெண்ணெய் பயன்படுத்தி உள்ளேன். தேங்காய் எண்ணெயின் மணம் இன்னும் நல்ல சுவையை கொடுக்கும்.
பீட்ரூட்டை குழைய வேகவைக்க வேண்டாம்.
தேங்காய் அளவு வேண்டுமென்றால் அதிகமாக்கி கொள்ளவும்.

பட விளக்கம்

Let me know the outcome of the recipe!