நோன்பு கஞ்சி

Nombu Kanji – நோன்பு கஞ்சி

நோன்பு கஞ்சி ஒரு வகையான கஞ்சி, இது அரிசி, பருப்பு, ஆட்டு இறைச்சி மற்றும் சில மசால் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படும். பொதுவாக இது முஸ்லீம் மக்கள் நோன்பு மேற்கொள்ளும் புனித மாதமான ரம்ஜான் மாதம் தயாரிக்கப்படும். இது ஒரு சத்தான மற்றும் எளிதாக சமைக்கக் கூடிய உணவு பதார்த்தம். குழந்தைகளுக்கு இதை எளிதில் ஊட்டலாம்.

Find recipe in English here.

தேவையான பொருட்கள்

அரிசி – 1/2 கப்
பாசிபருப்பு – 1/4 கப்
குழம்பு கடலைபருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் – 1 டீ ஸ்பூன்
ஆட்டு இறைச்சி – 100 கிராம்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
தக்காளி – 1 
காரட் – 1
முந்திரி பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 7 பல்
இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
கொத்தமல்லி இலை – 1/2 கப்
புதினா – 1/4 கப்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
கறிவெப்பிலை – 1 இணுக்கு
எலக்காய் – 3
கிராம்பு – 5
பட்டை – 1 குச்சி
தேங்காய் பால் – 1 கப்

நோன்பு கஞ்சி செய்முறை

முன் தயாரிப்பு

அரிசியை தண்ணீரில் அலசி பின் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
பாசிபருப்பு, குழம்பு கடலை பருப்பு மற்றும் வெந்தயத்தை நீரில் அலசி பின் அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
ஆட்டிறைச்சியை சுத்தம் செய்து பின் மிக்சியில் நன்கு அரைத்துக் கொள்ளவும்.

கஞ்சி செய்முறை

குக்கரி்ல் எண்ணெய் மற்றும் நெய் சேர்த்து மிதமான சூட்டில் சூடு செய்யவும்.
பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் முந்திரி சேர்க்கவும்.
லேசாக வதக்கி பின், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் கருவேப்பிலை சேர்க்கவும்.
கருவேப்பிலை வெடித்தவுடன், நறுக்கி வைத்த வெங்காயம் சேர்க்கவும்.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
பின்னர் நறுக்கி வைத்த கேரட், தக்காளி, கொத்தமல்லி இலை மற்றும் புதினா சேர்க்கவும்.
நன்றாக வதக்கிய பின் அரைத்து வைத்திருக்கும் மட்டனையும், உப்பும் சேர்க்கவும்.

ஊறவைத்த அரிசியை மிக்சி ஜாரில் எடுத்து, கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
பருப்பில் இருக்கும் தண்ணீரை வடித்து பின் பருப்பை குக்கரில் சேர்க்கவும்.
5 கப் அளவு தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி விடவும்.
கேஸ் வரும்போது விசில் போடவும்.
7 விசில் வரும் வரை மிதமான சூட்டில் சமைக்கவும்.
கேஸ் அனைத்தும் வெளியேறியவுடன், குக்கரை திறக்கவும்.
தேங்காய் பால் சேர்த்து நன்றாக கலக்கவும்.
நோம்பு கஞ்சி தயார்.

கூடுதல் குறிப்புகள்

நோன்பு கஞ்சி பொதுவாக மட்டன் சேர்த்துதான் சமைக்கப்படும். வெஜிடபிள் கஞ்சி வேண்டுமென்றால், இதே செய்முறையில், ஆட்டுக்கறி மற்றும் தவிர்த்து அப்படியே செய்யலாம்.
மஞ்சள் பொடி சேர்க்கவேண்டாம். கஞ்சி வெளிர் நிறத்தில்தான் இருக்கவேண்டும்.
வெங்காயம் வதக்கும்போதும், கலர் மாற விட வேண்டாம்.
கஞ்சி தண்ணீராக இருக்கவேண்டுமென்றால், சமைக்கும்போது இன்னும் ஒரு கப் சேர்த்துக்கொள்ளவும்.

படவிளக்கம்

தேவையான பொருட்கள்

முன் தயாரிப்பு

செய்முறை

Let me know the outcome of the recipe!