ஆரஞ்சு ஜூஸ்

Orange Juice – ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு ஜூஸ் / பழச்சாறு ஆரஞ்சு மரத்தில் கிடைக்கும் பழத்தின் சாறு. ஆரஞ்சில் நிறைய வகைகள் உண்டு. அவை நாவல் ஆரஞ்சு, ரத்த சிவப்பு ஆரஞ்சு, வாலன்சியா ஆரஞ்சு, கிளிமேன்டைன் மற்றும் டேஞ்சரின். வைட்டமின் சி மிகவும் நிறைந்த பழம் ஆரஞ்சு. உடலில் நோய் எதிப்பு சக்தி அதிகரிக்க ஆரஞ்சு உதவுகிறது. ஆரஞ்சு பழத்தில் இனிப்பு மிக அதிகம். அதனால் இதனை தினசரி குடிப்பது நல்லது அல்ல. நாவல் ஆரஞ்சு வகை பழத்தில் சாறு அதிகம் கிடைப்பதால் அது சாறு பிழிய மிகவும் உகந்தது. இந்த பழச்சாறு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. என்னுடைய அப்பா இதை தினசரி எனக்கு காலையில் கொடுப்பார்கள். காலையில் இந்த பழச்சாறை குடிப்பதால் செரிமானம் சார்ந்த பிரச்சனைகள் சரியாகும். மின்சாரத்தில் இயங்கும் ஜூஸர் வைத்து சாறு பிழியும் போது, வேலை சுலபமாக முடியும்.

4 டம்ளர் கிடைக்கும்.

Find Recipe in English here.

தேவையான பொருட்கள்

ஆரஞ்சு – 10
தேன் / சர்க்கரை / குளுக்கோஸ் (விரும்பினால்)

ஆரஞ்சு ஜூஸ் செய்முறை

ஆரஞ்சு பழத்தை கத்தி வைத்து இரண்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
அனைத்து ஆரஞ்சையும் வெட்டிக்கொள்ளவும்.
மின்சாரத்தில் இயங்கும் அல்லது கைகளால் பிழியும் ஜூஸர் உபயோகித்துக்கொள்ளவும்.
ஜூஸரில் உள்ள துளையின் அளவை தேவைக்கு தகுந்தபடி மாற்றிக் கொள்ளவும்.
ஒவ்வொரு பழமாக ஜூஸரில் வைத்து அழுத்தி பிழியவும்.
எல்லா ஆரஞ்சு பழத்தையும் பிழிந்து கொள்ளவும்.
ஆரஞ்சு பழச்சாறு தயார்.
கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.
ஆரஞ்சு துண்டு சிறிதாக வெட்டி டம்ளரில் வைத்து அழகு படுத்தலாம்.

கூடுதல் குறிப்புகள்

ஜூஸரில் உள்ள துளையை முழுவதுமாக திறந்து வைத்துக்கொள்ளவும். ஆரஞ்சு சுளையின் தோலும் சிறிது பழச்சாறில் கலக்கும். தோலில் நார்சத்து உள்ளது. அது உடல் ஆரோக்கியத்துக்கு மிக நல்லது.
நீங்கள் உபயோகித்த ஆரஞ்சு பழம் புளிப்பாக இருந்தால், சர்க்கரை / குளுக்கோஸ் அல்லது தேன் சேர்த்துக்கொள்ளவும்.
பழச்சாறில் தண்ணீர் அல்லது இனிப்பு சேர்க்காமல் பருகினால் அதன் பலன் அதிகம்.

பட விளக்கம்

Let me know the outcome of the recipe!