பூண்டு மிளகாய் பொடி

Garlic Chili Powder – பூண்டு மிளகாய் பொடி

பூண்டு மிளகாய் பொடி ஒரு சத்தான உணவு வகை. என் சிறு வயதில் பூண்டு மிளகாய் பொடியை ருசி பார்க்கக்கூட நான் விரும்பியது இல்லை, தற்போது ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது இதை சேர்த்துக் கொள்ள முடிவு செய்தேன். பூண்டும் கருப்பு உளுந்தும் தான் இதில் முக்கியமான பொருள், இரண்டுமே மிகவும் சத்துமிக்கது. கருப்பு உளுந்தில் புரதச்சத்து மற்றும் நார்சத்து அதிகம் உள்ளது. பூண்டு கொழுப்பை கரைக்கவும், இரத்த அழுத்தத்தை கட்டுபாட்டில் வைக்கவும், வாயுத் தொல்லையில் இருந்து விடுபடவும் உதவுகிறது. 

Find detailed recipe with pictures in English here.

தேவையான பொருட்கள்

பூண்டு – 1 கப்
உளுந்து – 1/2 கப்
குழம்பு கடலை பருப்பு – 1/2 கப்
எள் – 1/4 கப்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
கொத்தமல்லி விதை – 1 டீ ஸ்பூன்
வரமிளகாய் / மிளகாய் வத்தல் – 16
கருவேப்பிலை – 2 இணுக்கு
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன் + சிறிது
உப்பு – தேவையான அளவு

பூண்டு மிளகாய் பொடி செய்முறை

பூண்டு தோலை உரித்து, படத்தில் காட்டியபடி சிறிது இடித்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் மிதமான தீயில் சூடுபடுத்தி, அதில் உளுந்து சேர்க்கவும்.
சிறிது எண்ணெய் சேர்த்து நிறம் மாறும் வரை வறுக்கவும்.
வறுத்த உளுந்தை ஒரு தட்டில் மாற்றி விடவும்.
அடுத்து குழம்பு கடலை பருப்பை வாணலியில் சேர்த்து வறுக்கவும்.
நிறம் மாறியவுடன் அதையும் தட்டில் மாற்றி விடவும்.
பின்னர் சீரகம், கொத்தமல்லி விதையை வறுக்கவும்.
அடுப்பில் தீயை குறைவாக வைத்து எள்ளை வறுக்கவும்.
அதேபோல் குறைவான தீயில் வைத்து வரமிளகாயை வறுக்கவும்.
கறிவேப்பிலையையும் தனியாக வறுக்கவும்.
கடைசியாக 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து மிதமான தீயில், இடித்து வைத்துள்ள பூண்டையும் வறுக்கவும்.
அனைத்து பொருட்களையும் நன்றாக ஆற விடவும்.
ஜாரின் அளவிற்கேற்ப அனைத்து பொருட்களையும் சம’அளவில் சேர்த்து அரைக்கவும்.
கலந்து விட்டு சிறிது உப்பு சேர்த்து மறுபடி அரைக்கவும்.
நன்றாக கொரகொரப்பாக அரைத்து மறுபடி பேப்பர் அல்லது தட்டில் மாற்றவும்.
பூண்டு மிளகாய் பொடி தயார்.
இதை கண்ணாடி ஜார் அல்லது காற்று புகா ஜாடியில் சேமித்து வைக்கவும். இது பூண்டின் மணம், சுவை மாறாமல் இருக்க உதவும்.
இட்லி, தோசை மற்றும் அடையுடன் சேர்த்து பரிமாறவும்.

கூடுதல் குறிப்புகள்

ஏதாவது ஒரு தானியம் லேசாக கருகினாலும், கசப்பு சுவை வந்துவிடும்.
கருப்பு உளுந்துக்கு பதில், தோல் நீக்கிய உளுந்தை உபயோகிக்கலாம்.
அதேபோல் வெள்ளை எள்ளையும் உபயோகிக்கலாம்.
பூண்டை லேசாக இடித்தால் போதும். கரையும் அளவு தட்ட வேண்டாம்.

பட விளக்கம்

One Reply to “பூண்டு மிளகாய் பொடி”

Let me know the outcome of the recipe!